(நா.தினுஷா)

நாட­ளா­விய ரீதியில் புகை­யி­ரத போக்­கு­ வ­ரத்துத் துறையின் அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­காக ஆசிய அபி­வி­ருத்தி  வங்­கி­யி­ட­மி­ருந்து 160 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் கட­னு­தவி கிடைக்­க­வுள்­ளது. இது தொடர்­பான ஒப்­பந்­தத்தில்  கைச்­சாத்­திடும் நிகழ்வு இன்று செவ்­வாய்க்­கி­ழமை  நிதி அமைச்சில் இடம்­பெ­ற­வுள்­ள­தாக போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார்.  

இந்த ஒப்­பந்தம் தொடர்பில்  விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று திங்­கட்­கி­ழமை  அலரி மாளி­கையில் இடம்­பெற்­றது. இதன்­போது அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது;  

போக்­கு­வ­ரத்து அமைச்சு கடந்த ஆறு மாத­ங்க­ளாக புகை­யி­ரதப் போக்­கு­வ­ரத்து துறை மற்றும் பேருந்து போக்­கு­வ­ரத்து துறை சார்ந்த அபி­வி­ருத்திப் பணிகள் குறித்து விசேட கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. பேருந்து போக்­கு­வ­ரத்து சேவைக்கு அப்பால் புகை­யி­ரத போக்­கு­வ­ரத்து சேவையே அதி­க­ளவு மக்­களின் போக்­கு­வ­ரத்­துக்கு இல­கு­வா­னது. அத்­துடன் அர­சாங்­கத்­துக்கு அதிக இலா­பத்தை பெற்­றுக்­கொ­டுப்­ப­தா­கவும் இது இருக்­கி­றது. 

புகை­யி­ரதப் போக்­கு­வ­ரத்து அபி­வி­ருத்­திக்­காக 16 கோடி அமெ­ரிக்க டொலர்  கட­னு­த­வியை வழங்க ஆசிய அபி­வி­ருத்தி வங்கி நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இந்தக் கடன் தொகையை மீள் செலுத்­து­வ­தற்­காக 29 வருட கால அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டுள்ளது.  மாத்­தறை பெலி­யத்த புகை­யி­ரத பாதையின் அபி­வி­ருத்திப் பணிகள் தற்­போது நிறை­வ­டைந்­துள்­ளன. குரு­ணாகல்– -ஹப­ரண புகை­யி­ரதப் பாதை அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­போன்று இந்­தியா மற்றும் சீனா­விடம் இருந்து புகை­யி­ரதப்  பெட்­டிகள் மற்றும் என்­ஜின்கள்  கொள்­வ­னவு செய்யப்­பட்­டுள்­ளன. மேலும் புதி­தாக 160 புகை­யி­ரதப்  பெட்­டி­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

மறு­புறம் 200 பழைய புகை­யி­ரதப் பெட்­டி­களை நவீன மயப்­ப­டுத்தும் பணி­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. முடிந்த அள­வுக்கு  புகை­யி­ரத சேவையை பயன்­ப­டுத்­து­வ­தற்கு மக்­களை இணைத்­துக்­கொள்­வதே எங்­களின் எதிர்­பா­ர்ப்­பாக இருக்­கி­றது. அதே­போன்று கொழும்பு பிர­தே­சத்­துக்கு உட்­பட்ட கள­னி­வெளி புகை­யி­ரதப் பாதையின் அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­கான உடன்­ப­டிக்­கைக்­கான பணி­களும் நிறை­வ­டைந்­துள்­ளன. கொழும்பு -– ரம்­புக்­கண  மற்றும் கொழும்பு – களுத்­துறை புகை­யி­ரத வீதி அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­கான திட்­ட­மிடல் நட­வ­டிக்­கை­களும் நிறை­வுக்கு வந்­துள்­ளன. 

ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யி­ட­மி­ருந்து புகை­யி­ரத போக்­கு­வ­ரத்து அபி­வி­ருத்­திக்­கென்று முதல் முறை­யா­கவே  இந்தக் கட­னு­தவி கிடைக்கப் பொற்­றுள்­ளது. ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யால் வழங்­கப்­படும்  நிதி 32 அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இதனை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஒப்­பந்தம்  இன்று செவ்­வாய்க்­கி­ழமை நிதி அமைச்சில் கைச்சாத்­தி­டப்­ப                     டும்.

மேலும் புகை­யி­ரத சேவையின் வினைத்­தி­றனை அபி­வி­ருத்தி செய்யும் வேலைத்­திட்­டத்தின்  கீழ், புகை­யி­ரத அனு­மதிப் பத்­திரம் மற்றும் இருக்கைப் பதிவு செய்யும் பிரிவை விருத்தி செய்­வ­தற்கு விசேட நட­வ­டிக்கை எடுக்­கவும் எதிர்­பார்த்­துள்ளோம். இதற்கென்று நவீன கைய­டக்கத் தெலை­பே­சிகள், போக்­கு­வ­ரத்து அட்­டை­களைப் பயன்­ப­டுத்­துதல், இணை­யத்­தள அனு­மதி கோரல் உள்­ளிட்ட புதிய திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

மேலும் நாடு­பூ­ரா­கவும் மின்­சார புகை­யிரத சேவை­யை உரு­வாக்­குதல், கொழும்பு புகை­யி­ரத கட்­டு­ப்பாட்டு காரி­யா­லயம் மற்றும் புகை­யி­ரத செயற்­பாட்டு மத்­திய நிலை­யத்தை நிர்­மா­ணித்தல், புகை­யி­ரதம் தொடர்­பான பயிற்சி மத்­திய நிலையம்,பரிசோதனை மற்றும் விற்பனை  நிலையங்களை நிர் மாணித்தல், மாலபல்ல புகையிரத நிலை யத்துக்கு அருகிலுள்ள வீடுகளுக்காக 108 மாடிகளைக் கொண்ட தொடர்மாடி வீட் டுத் தொகுதியை நிர்மாணித்தல், இரத் மலானை புகையிரத இயந்திர பொறியியலா ளர் உப திணைக்களத்துக்கென புதிய விற் பனை நிலையம், களஞ்சியசாலை மற்றும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்தல் உள் ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக் காக இந்த நிதியை உபயோகப்படுத்த எதிர் பார்த்துள்ளோம் என்றார்.