(ஆர்.யசி)

ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் கட்­சிக்குள் பிள­வுகள் இல்லை. கூட்­டணி அமைத்த அன்­றைய தினமே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரையும் அறி­விப் போம். கரு, சஜித் ஆகி­யோரின் பூரண ஒத்­து­ழைப்­புடன் வேட்­பாளர் ஒருவர் அறி­விக்­கப்­ப­டுவார் என்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 

ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் என்னை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கினால் எனது கட­மையைச் சரி­யாக நிறை­வேற்­றிக்­ காட்­டுவேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற புகைப்­பட கண்­காட்சி நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்ட அமைச்சர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு  அவர் மேலும் கூறு­கையில், 

ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் குழப்­பங்கள் எதுவும் இல்லை. கட்­சிக்குள் பிள­வுகள் உள்­ள­தாக கூறி­னாலும் அவ்­வா­றான எந்தப் பிள­வு­களும் ஏற்­ப­ட­வில்லை. கூட்­டணி அமைப்­பது குறித்தே பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. கூட்­ட­ணிக்­கான யாப்­பினை உரு­வாக்­கு­வது குறித்து கடந்த சில வாரங்­க­ளாக பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த வாரமும் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்தோம். அத்­துடன் கூட்­ட­ணியின் சார்பில் வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்கி வெற்­றி­பெறச் செய்­வதே எமது நோக்­க­மாக உள்­ளது. அதற்­கான முயற்­சி­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.  

கூட்­டணி அமைக்கும் அன்­றைய  தினமே கூட்­ட­ணியின் சார்பில் எமது ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­ப­தையும் அறி­விப்போம்.  சஜித் பிரே­ம­தா­சவின் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புடன் எமது வேட்­பாளர் யார் என்­பதை அறி­விப்போம். கரு, சஜித் ஆகி­யோரின் பூரண இணக்­கத்­துடன் எமது வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டுவார். 

என்னை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்தால் கூட  எனது கட­மையை சரி­யாக நான் செய்து முடிப் பேன். ஆனால் இந்த ஆட்சி ஒரு­போதும் குடும்ப ஆட்­சி­யாக மாறக்கூடாது. அதற்கு நாம் இடமளிக் கக்கூடாது. இந்த ஜனாதிபதி தேர்தலுடன் குடும்ப ஆட்சியாளர்களின் அதிகாரங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது மாத்திரம் உறு தியாகக் கூட முடியும் என்றார்.