பரசூட் மூலம் விமான சாகசப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அம்பாறை உகண விமானப்படை முகாமைச் சேர்ந்த விமானப்படை வீரர் ஒருவர் விமான சாகச பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பரசூட் செயலிழந்தமையால், கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.