அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பணிபுரியும் 9 தாதியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகினர்.

இதையடுத்து குறித்த 9 கர்ப்பிணி தாதியர்களும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டு “எங்கள் வைத்திய நிலையத்தின் 9 தாதியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருக்கிறார்கள். 

அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் பிரசவிப்பதற்குள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்த்து.

இந்த புகைப்படம் அப்போது சமூக வலைத் தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமூகவலைத்தள ஆர்வலர்கள் தாதியர்களுக்கு வாழ்த்துக்கூறி அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர்.

இந்த நிலையில் அந்த தாதியர்கள்  9 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. தாதியர்கள்   9 பேரும் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அந்த வைத்தியசாலை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைராலாகி வரும் அந்த புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.