(செ.தேன்மொழி)

கந்தானை - புபுதுகம பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுள்ள போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புபுதுகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காந்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கொழும்பு - மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 28,31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4.5 கிலோ கிராம் அஸிஸ் போதைப் பொருளும் , 500 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானை பொலிஸார் சந்தேக நபர்களை இன்று  திங்கட்கிழமை வெலிசர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதன்போது நீதிவான் சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.