(ஆர்.விதுஷா)

அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கம்  நாடுதழுவிய  24 மணிநேர   வேலை நிறுத்த  போராட்டத்தினை  எதிர்வரும் வியாழக்கிழமை   (22)  காலை  8 மணி;க்கு  ஆரம்பிக்கவுள்ளதாக  அறிவித்துள்ளது.  

இந்த  வேலைநிறுத்தத்திற்கு  பின்னரும் தகுந்த  தீர்வு  எட்டப்படவில்லை  எனின்  அதற்கு  அடுத்த  கட்ட  நடவடிக்கை  தொடர்பில்   அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள் சங்கத்தின்  மத்திய  செயற்குழு  கூட்டத்தில்  தீர்மானிக்கப்படும்  எனவும் அறிவித்தது.  

சுகாதாரத்  துறையில்  காணப்படும்  குறைபாடுகளை  நிவர்த்தி  செய்து  தருமாறு  கோரி    தொடர்ந்தும்  2  வாரங்கள்  வரையில் இந்த  சங்கம் அரசாங்கத்திற்கு  கால  அவகாசம்  அளித்திருந்தது.  

இருப்பினும்  அவர்களுடைய  கோரிக்கைக்கு  அரசாங்கம்  கவனம்  செலுத்தாத  பட்சத்திலேயே  வியாழக்கிழமை  வேலை நிறுத்தப்போராட்டத்தை  நடத்த  தீர்மானித்துள்ளனது.  இருப்பினும்   உரிய  தரப்பினருடனான  கலந்துரையாடல்களின்  போது  மக்களுக்கு  நன்மை பயக்கும் வகையிலான   தீர்மானங்கள்  எட்டப்படும் பட்சத்தில்  வேலை நிறுத்தத்தை தவிர்க்கமுடியும்  எனவும்  அறிவித்தது. 

வேலை  நிறுத்த  போராட்டத்தை நடத்துவதற்கான  தினத்தை அறிவிக்கும்  வகையில்  ஏற்பாடு  செய்யப்பட்ட  ஊடக  சந்திப்பு  அந்த  சங்கத்தின்  தலைமையகத்தில்  இன்று  திங்கட்கிழமை  இடம்  பெற்றது.  இதில்  கலந்து கெண்டு  உரையாற்றிய  சங்கத்தின்  செயலாளர்  ஹரித  அளுத்கே   குறித்த போராட்டம் குறித்து அறிவித்தார்.