(எம்.எப்.எம்.பஸீர்)

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பிரபல பாதாள உலகத் தலைவன் கஞ்சிபானை இம்ரானுடன், அவர்  சார்ந்த விசாரணைகளை முன்னெடுக்கும் சி.சி.டி. எனபப்டும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தொடர்புகளைப் பேணுவதாக முன்வைக்கபப்டும் குற்றச்சடடுக்கள் தொடர்பில் மேலதிக  விசாரணைகள் எஸ்.ஐ.யூ.எனபப்டும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்ப்ட்டுள்ளன.  

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குனவர்தனவின் மேற்பார்வையில், கல்கிசை  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் முதித்த புசல்ல முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, மேலதிக விசாரணைகள்  எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்ப்ட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குனசேகர தெரிவித்தார்.

 இந் நிலையில் இந்த மேலதிக விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய, கஞ்சிபானை இம்ரானுடன் தொடர்பில் உள்ளதாக குற்றம் சாட்டப்ப்டும் சி.ஐ.டி.யின் மூன்று உப பொலிஸ் பரிசோதகர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில்  வடக்குக்கு இடமாற்றப்ப்ட்டுள்ளனர். 

இம்மூவரில் ஒருவர்  யாழ். பொலிஸ் பிரிவுக்கும், பிரிதொருவர்  முல்லை தீவு பொலிஸ் பிரிவுக்கும் மற்றையவர் மன்னார் பொலிஸ் பிரிவுக்கும் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு கூறினார்.