எதிர்காலத்தில் சகல அரச அதிகாரங்களையும்  ஒருநிலைப்படுத்தி ஆட்சியை தொடர்வோம் -  பிரதமர் 

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 06:28 PM
image

(எம்.மனோசித்ரா)

கட்சிசாரா ஜனாதிபதியுடன் அதிகார ரீதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , எதிர்காலத்தில் சகல அரச அதிகாரங்களையும்  ஒருநிலைப்படுத்தி நாட்டை அனைத்து துறைகளிலும் வலுப்படுத்துவோம் என்பதில் யாரும் ஐயம் கொள்ள தேவையில்லை  எனவும் குறிப்பிட்டார். 

மாவத்தகம சாமோதய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில், 

அரசாங்கத்துக்கு நிலையான அதிகரமோ ஜனாதிபதி அதிகாரங்களோ அற்ற நிலையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடிந்தது. எதிர்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும்  ஒருநிலைப்படுத்தி நாட்டை துரித அபிவிருத்தி பாதையில் முன்னெடுக்கப்படும் 

பெரும்பான்மையை கொண்ட அரசாங்கத்தினால் கூட செய்ய முடியாத அபிவிருத்தி பணிகளை நாங்கள் முன்னெடுத்திருந்தோம். 2015 ஆம் ஆண்டு ஆட்சியை நாம் பொறுப்பேற்ற போது சர்வதேச கடன்களை மீள் செலுத்த முடியாத நிலைமே காணப்பட்டது. 

ஆனால் தற்போது நாட்டு நிலைமையை முற்று முழுதாக மாற்றியமைத்துள்ளோம். சர்வதேசம் எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. 

 சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கை மீது ஆர்வம் கொண்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் சுற்றுலாப்பயணகளின் வருகை பின்னவுகளை சந்திருந்தாலும் தற்போது அந்த நிலை மாற்றமடைந்துள்ளது. 

அரசாங்கத்தில் கூடிய அதிகாரங்கள் அற்ற நிலையில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். எதிர்காலத்தில் அனைத்து பதவிகளுகாகன அரச அதிகாரங்களைப் பெற்று இதனை விட பன்மடங்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளோம். 

சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. கட்சிக்கு அப்பால் செயற்படும் ஜனாதிபதி ஒருவருடன் இந்தளவு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கக் கூடியதாக இருந்த நிலையில் முழுமையாக அதிகாரங்கள் கிடைப்பெறும் பட்சத்தில் இந்த நிலை மேலும் விருத்தி பெறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47