நல்லாட்சி அரசாங்கம் உட்பட நல்லாட்சியினை ஸ்தாபிப்பதற்கு ஒன்றுப்பட்டு செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினரும் ஊடகங்களை அச்சுருத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது.

வரலாற்று ரீதியில் மக்கள் விடுதலை முன்னணி தமக்கு எதிராக செயற்பட்ட ஊடகங்கங்களை ஆயிதங்கள் மூலமாகவே அச்சுறுத்தியது ஆனால் இன்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தனக்கும் கட்சிக்கும் எதிராக கருத்துகளை தெரிவிக்கும் ஊடகங்களை சுவரொட்டி, தொலை பேசி மூலமாக அச்சுருத்துவதாகவும் இதன் போது சுட்டிகாட்டியது.

இன்று பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உரிமையின் தலைவருமான உதய கம்பன் பிலமேற்கண்டவாறு குறிப்பிட்டார்.