இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தூதுவர்களும் உயர்ஸ்தானிகரும் இன்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றுப்பத்திரங்களை கையளித்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நோர்வே, ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகரும் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றுப்பத்திரங்களை கையளித்தனர்.