உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் 'டாப் 10'  கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

அதில், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். 

அடுத்த இடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். அவரை  பேஸ்புக்கில் 2.8 கோடி பேரும், டுவிட்டரில் மூன்று கோடியே பத்து லட்சம் பேரும், இன்ஸ்டாக்ராமில் ஒரு கோடியே 65 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாவிட்டாலும்  முன்றாவது இடத்தில்  இந்திய ஒரு நாள் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பிடித்துள்ளார்.   அவரை பேஸ்புக்கில் 2 கோடியே ஐந்து லட்சம் பேரும், ட்விட்டரில் 77 லட்சம் பேரும், இன்ஸ்டாக்ராமில் ஒரு கோடியே 54 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

மேலும், கிரிக்கெட் வாழ்க்கையில் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளமையை கௌரவிக்கும் முகமாக டெல்லியில் உள்ள பெரோஷ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு (மைதானத்தின் குறிப்பிட்ட இருக்கைகள் அமைந்துள்ள பகுதி) விராட் கோலியின் பெயர் சூட்டப்பட உள்ளது.