இலங்கை மின்சார சபை தனியார் நிறுவனத்திடம் மின்கொள்வனவு செய்ய எவ்விதமான அவசியமும் இல்லை. வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொள்ளாது தனிப்பட்ட நோக்கங்களுக்காக மக்கள் மீது அதிக சுமையை சுமத்த முற்படுவதாக தேசிய நுகர்வோர் வலையமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட மூலோபாய மற்றும் தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் அபே குணவர்தன கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.