கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து  85 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. ‌

ஆண்டிராய்டு மொபைகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட  செயலிகளால் வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத விளம்பரங்கள் அடிக்கடி வருவதாக புகார் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தானாக பதிவிறக்கமாகும் கேம் செயலிகளையும் கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. இதில் 80 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட முன்னணி செயலிகளையும் கூகுள் நிறுவனம் நீக்கிவிட்டது.

சூப்பர் செல்ஃபி, சிஓஎஸ் கேமரா, பாப் கேமரா, மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில்  உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட செயலிகளில் பெரும்பாலானவை புகைப்படம் எடுத்தல் மற்றும் கேமிங் தொடர்பான செயலிகளாக உள்ளன.