திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்கையை தாக்கி காயப்படுத்திய அண்ணனை நேற்றிரவு(18) கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related image

தீவரகம்மானை, இரண்டாம் பியவர, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

சந்தேக நபரின் தங்கை கல்வியில் ஆர்வம் செலுத்தாமல் இளைஞயொருவனை காதலித்து வந்துள்ளதோடு,காதலிக்கும் இளைஞனை வீட்டுக்கு அழைத்து கதைத்துக்கொண்டிருப்பது மற்றும் ஊர் சுற்றித் திரிவது போன்ற செயற்பாட்டில் ஈடுபட்ட தங்கையை மூர்க்கத்தனமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தெரிவித்து சந்தேக நபருக்கெதிராக மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது குறித்த நபரை  செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயங்களுக்குள்ளான சந்தேக நபரின் தங்கை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.