(எம்.மனோசித்ரா)

போர் கால ஒத்துழைப்புகள் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கைகான ஆதரவு போக்கு மற்றும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் யசூசி அகாஷிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - 07 , விஜேராம இல்லத்தில் இன்று  திங்கட்கிழமை  முற்பகல்  இடம்பெற்ற இந்த சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஜப்பான் தூதரகத்தின் முக்கியஸ்தர்கள் இருந்துள்ளனர். 

இந்த சந்திப்பானது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இடம்பெற்ற சிநேகப்பூர்வமானதும் ஆரோக்கியமானதுமான சந்திப்பென கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்த கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் யசூசி அகாஷி இவங்கைக்கு வியஜம் மேற்கொண்டு பலதரப்பட்ட சந்திப்புகளில் கலந்துக்கொண்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் குறித்த செய்திகள் பரப்பரப்பாக பேசப்படுகின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளமை முக்கியமானதாகும்.