எனது பாதுகாப்பை அதிகரியுங்கள்  : ஜனாதிபதியிடம் கோத்தாபய கோரிக்கை !

By Priyatharshan

19 Aug, 2019 | 01:17 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ  கோரிக்கை விடுத்துள்ளார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதிப்படுத்தினார். 

இந்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அதனால் தனது பாதுகாப்பை பலப்படுத்துமாறும் எவ்விதமான கோரிக்கையும் விடுக்கவில்லை என  மறுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைய ஊடகங்கள் சிலவற்றில்  தவறாக செய்திகள் பரப்பப்படுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார். 

வடக்கை மையப்படுத்தி செயற்படும் இரண்டு குழுக்களினால் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் , அதற்காக வெளிநாடொன்றிலிருந்து தூரத்திலிருந்து சுடக்கூடிய (ஸ்னைபர் ) துப்பாக்கி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக இணையதளத் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதனடிப்படையில் தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் நேரடியாகவே கோரியதாக அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 

எனினும் அவ்வாறானதொரு அச்சுறுத்தல் கோத்தபாயவிற்கு இல்லை எனவும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையிலேயே பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரியதாக அந்த முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right