பெருந்தோட்ட பாதைகளை புனரமைக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இணக்கம் - விரைவில் பணிகள் ஆரம்பம் ; திலகராஜ்

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 12:31 PM
image

மலை­யகப் பெருந்­தோட்ட பாதைகள் யாருக்கும் சொந்­த­மில்லை. அவை தோட் டப் பாதைகள் என அடை­யாளப்படுத்­தப்­பட்­டுள்­ளதால் அர­சாங்­கத்தின் எந்த முகவர் அமைப்பும் அவற்றை பொறுப்­பேற்று புன­ர­மைப்­பதோ பரா­ம­ரிப்­பதோ இல்லை. எனவே மாகாண வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை மற்றும் உள்­ளூ­ராட்சி அதி­கார சபைக்கு கீழாக தோட்டப் பாதை­களை பிர­க­ட­னப்படுத்­து­மாறு கோரி பாரா­ளு­மன்றில் பிரே­ரணை முன்­வைத்தேன். 

அதனை உள்­நாட்டு அலு­வல்கள், மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி அமைச்சு ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. விரைவில் அதற்­கான பணிகள் ஆரம்­ப­மாகும் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் பொதுச் செய­லா­ளரும் நுவ­ரெலியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். தில­கராஜ் தெரி­வித்­துள்ளார்.

கொட்­ட­கலை பிர­தே­ச ­ச­பைக்­குட்­பட்ட யுலிபீல்ட் - அந்­தோ­னி­மலை பாதை கார்ப்பட் இடு­வ­தற்­கான ஆரம்பப் பணிகள் அண்­மையில் அந்­தோ­னி­ம­லையில் கொட்­ட­கலை பிர­தேச சபை உறுப்­பினர் நாகேந்­திரன் தலை­மையில் இடம்­பெற்­றது. 

தொழி­லாளர் தேசிய சங்க உப­த­லை­வர்கள் ராஜ­மா­ணிக்கம், சிவா­னந்தன், கொட்­ட­கலை பிர­தேச அமைப்­பாளர் செந்­தூரன், செய­லாளர் சுரேஷ் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்ட இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றியபோதே தில­கராஜ் மேற்­கண்­ட­வா­று தெரி­வித்தார்.

 அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

உள்­நாட்டு அலு­வல்கள் மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி அமைச்சு ஏற்­றுக்­கொள்­வ­தற்கு முன்ன­தா­கவே பெருந்­தெ­ருக்கள் அமைச்சின் ஊடாக நாம் பெருந்­தோட்டப் பகுதி பாதைகள் பல­வற்றை புன­ர­மைத்து வரு­கிறோம். அண்­மையில் அமைச்சர் கபீர் ஹாசிமை அழைத்து வந்து கார்பட் பாதை­களை மக்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்­வு­களை நடத்தியிருந்தோம். இப்­போது ரண்­மாவத் திட்­டத்­துக்கு மேலாக பெருந்­தோட்டப் பாதை­க­ளுக்கு என விசேட திட்டம் ஒன்றை வழங்­கவும் அமைச்சர் கபீர் எமக்கு ஒப்­புதல் வழங்­கி­யுள்ளார்.

தற்­போ­தைய ரண்­மாவத் திட்­டத்தின் கீழ் சந்­தி­ரி­காமம், ராணி­வத்தை, பிட்­டவின், சென்கூம்ஸ், டில்­லி­குல்ற்றி, ரொஸ்­கி­ரியா ஆகிய பாதை­க­ளுடன் அந்­தோனிமலை பாதையிலும் எனது கோரிக்­கையின் பேரில் கார்ப்பட் பணி­களை ஆரம்­பித்­துள்­ளார்கள். அதே­போல எமது தலைவர் அமைச்சர் திகாம்­பரம் தலை­மையில் மேபீல்ட் பாதை பணிகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

எபோட்ஸ்லி பாதை விரைவில் ஆரம்­பிக்­கப்­படும். இதனை அறிந்தே அங்கு போராட்டம் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­வ­தாக அறி­கிறேன். பாதை கேட்­டு­நின்ற மலை­யக  மக்கள்  இப்­போது கார்ப்பட் பாதை கேட்டு போராடும் காலம் மலர்ந்­துள்­ளது. இது அர­சியல் மாற்­றத்தின் அடை­யா­ள­மாகும்.

இங்கே அந்­தோ­னி­ம­லைக்கு வழங்­கப்­படும் பாதையை தமக்கு வழங்­குமாறு வழியில் நின்று என்­னிடம் கேட்­டனர். இந்தப் பாதை யூலிபீல்ட் சந்­தியில் தொடங்கி அந்­தோ­னி­ம­லையில் நிறை­வ­டை­கின்­றது.

அந்­தோ­னி­மலை மக்கள் இந்த வீதி­யினை புன­ர­மைக்க கோரி பாரிய போராட்டம் ஒன்­றினை நடாத்­தினர். அப்­போ­துதான் புதிய பிர­தேச சபை உறுப்­பி­ன­ராக தெரி­வான எமது கட்­சியின் நாகேந்­திரன் என்ன செய்­வது என என்­னிடம் கேட்டார். உடனே தளத்­திற்கு சென்று எமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தில­கராஜ் இதனை புன­ர­மைத்து தரு­வ­தாக உறு­தியளித்­துள்ளார்  என மக்­க­ளிடம் சொல்­லுங்கள் என்றேன். அது இப்­போது நிறை­வே­று­கின்­றது.

வெலிங்டன், யுலிபீல்ட் என கிறிஸ்லஸ் பாம் என இந்த பாதை அறு­ப­தடி  பால­ சந்­தியை சென்­ற­டையும். இத்­த­கைய பாதை அபி­வி­ருத்­தி­களை ஒரு சவா­லா­கவே எதிர்­கொள்­கிறோம். அதே­போன்று புரட்டப், சந்­தி­ரி­காமம் போன்ற பாதை­க­ளுக்கு கடந்த ஆண்டே கார்ப்பட் இட திட்டமிடப்பட்ட போதும் அந்த திட்டங்களும் கைவிடப்பட்டன. மீண்டும் மீட்டு வந்து விரைவில் புனரமைப்பு செய்வுள்ளோம். நான் வாக்குறுதியளித்த அந்த பாதைகளை புனரமைக்காவிட்டால் அந்த மக்களிடம் நான் வாக்கு கேட்டுப்போகமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55