வவுனியா நகரப்பகுதிகளில் அண்மைய சில நாட்களாக கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றன. இச் செயற்பாட்டினால் வீதிகளில் செல்லும் மக்கள் பலர் அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரில் மக்கள் நடமாடும் பகுதிகளில் அதிகளவான பத்திற்கும் மேற்பட்ட கட்டாக்காலி நாய்களின் நடமாட்டங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. 

இதனால் நகருக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் செல்லும் முதியவர்கள் உட்பட பெண்கள் உட்பட பலர் வீதிகளிலுள்ள கட்டாக்காலி நாய்களினால் விபத்துக்களையும் எதிர் நோக்கி வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த நகரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.