தனக்கு பரி­மா­று­வ­தற்­கான  சான்ட்விச் உணவை விரை­வாகத் தயா­ரிக்கத் தவ­றிய  ஹோட்டல் பணி­யாளர் மீது சின­ம­டைந்த வாடிக்­கை­யாளர் ஒருவர் அவரை துப்­பாக்­கியால் சுட்டுக் கொன்ற விப­ரீத சம்­பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்­பெற்­றுள்­ளது. 

கடந்த வெள்ளிக்­கி­ழமை  கிழக்கு நொய்ஸி லி கிரான்ட் புற­ந­கரப் பகு­தியில் இடம்­பெற்ற  இந்தப் படு­கொலை தொடர்­பான தக­வல்கள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்­ளன.

குறிப்­பிட்ட 28 வய­தான பணி­யாளர் சான்ட்விச் உணவைத் தயா­ரிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் சினமடைந்த வாடிக்கையாளர் அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் படுகாயமடைந்த அந்தப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள வாடி க்கையாளர் படுகொலைக் குற்றச்சாட்டு விசார ணையை எதிர்கொண் டுள்ளார்.