ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடல் வீதியின் கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டப்பகுதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட தேவையுடைய இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இணைந்து முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.