முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை விசாரணை செய் அல்லது விடுதலை செய், எனக்கோரி கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி  நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த தினம் நேற்று இதனையிட்டு கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இந்த கண்டன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது

இந்த பேரணியில் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு 13 வது திருத்தச்சட்டத்தை நீக்கு, கிழக்கின் அபிவிருத்தி நாயகனை விடுதலை செய், கிழக்கின் அடிமை விலங்கை உடைக்க பயங்கர வாதச் சட்டத்தை நீக்கு,

படுவான்கரை தனிக் கல்வி வலயத்தை உருவாக்கிய தலைவனை விடுதலைசெய் என வலியுறுத்தி இந்த கண்டன பேரணி மட்டு காந்தி பூங்காவிற்கு முன்னாள் ஆரம்பித்து வாவிக்கரை வீதியிலுள்ள கட்சியின் காரியாலயம் வரை சென்று முடிவுற்றது 

இதனையடுத்து அங்கு கட்சியின் அலுவலகத்தில் கிழக்கின் நாயகனின் ஆதரவாளர்களோடிணைந்த சிறப்பு பிறந்த நாள் நிகழவுக்கூட்டமும் இடம்பெற்றது.