(செ.தேன்மொழி)

சட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

அதற்கமை பொதுமக்கள் 1913 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு சட்டவிரோத மதுபானம் தொடர்பான எந்த முறைபாடுகளையும் முன்வைக்கமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

இதன்போது முறைபாடுகளை முன்வைக்கும் நபர்களின் இரகசியம் பேணப்படுவதுடன், பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தமது முறைபாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை அனுமதியுடன் இயங்கி வரும் மதுபான நிலையங்களிலும் குறிப்பிடப்பட்ட அளவைவிட அதிகமாக மதுபானம் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தால் அந்த விடயம் தொடர்பிலும் தகவல்களை வழங்க முடியும் என்றும் திணைக்களம்  மேலும் தெரிவித்துள்ளது.