(செ.தேன்மொழி)

எல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

எல்பிட்டி - பிட்டிகல வீதி,  தல்கஸ்பே பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை அம்பாறை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது 43 வயதுடைய , விஜித நந்தன கெலும் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் வெற்றுத் தோட்டக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்திய போது நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.