(செ.தேன்மொழி)

தலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

தலாத்து ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மாரஸ்சன - கன்சர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவரிடமிருந்து ஒரு கிராம் 115 மில்லி கிராம் ஹெரோயின் , 20 கிராம் கஞ்சா மற்றும் 330 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் போதைப் பொருட்களை மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லும் போதே பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தி கைது செய்துள்ளனர். 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.