வைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண்ணொருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேரஹெர பகுதியில் அமைந்துள்ள கே.டீ.யூ வைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து 28 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட குறித்த பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வேரஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.