(செ.தேன்மொழி)

லசந்த விக்ரமதுங்க படுகொலை. முல்லைத்தீவு தொண்டுநிறுவன ஊழியர்கள் 17 பேர் கொலை உள்ளி;ட்ட 6 சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கையினை குற்றப்புலானய்வு பிரிவிடம் பதில் பொலிஸ்மாதிபர் கோரியுள்ளார். 

மேலும் அந்த அறிக்கைகளில் கட்டாயம் இடம்பெற வேண்டிய 11 விடயங்கள் குறித்தும் அறிவுருத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவித்தல் இனு்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார். 

குற்றப் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதான ஐந்து வழக்கு விசாரணைகள் தொடர்பில் உடனடியாக விசாரணை அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்விற்கு அறிவித்தல் விடுத்துள்ளது. 

சட்டமா அதிபர் தம்புல தி லிவேராவினால் கடந்த வியாழக்கிழமை பதில் பொலிஸ்மாதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு அனுப்பபட்ட கடிதம் தொடர்பில் அவதானம் செலுத்திய பதில் பொலிஸ் மா அதிபர் இந்த அறிவித்தளினடிப்படையில் சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை , றகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல், முல்லைத்தீவில் தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேர்  கொலை மற்றும் 11 மாணவர்களை கடத்தி சென்று காணாமல் செய்தமை தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையினையே சட்டமாதிபர் பதில் பொலிஸ்மாதிபரிடம் கோரியிருந்தார். 

இந்நிலையில் இந்த ஐந்து வழக்கு விசாரணைகளுடன் மேலும் ஒரு வழக்கான ஊடகவியலாளர் பிரகதீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலும் குற்றப் புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. 

அதற்கமைய இந்த 6 சம்பங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து தனித்தனியாக அறிக்கை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மாதிபர் குற்றப்புலாள்வு பிரிவிற்கு அறிவித்துள்ளார். 

அத்துடன் விசாரணைகள் தொடர்பில் தகவல்களை தமக்கு அறிக்கை படுத்தும் போது 11 விடயங்கள் கட்டயாமாக உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.