(ஆர்.யசி, இராஜதுரை ஹஷான்)

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைமையிலான  "தேசிய மக்கள் சக்தியின்" ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக அறிவிக்கப்பட்டார்.  ஆயிரக்கணக்கான  ஆதரவாளர்கள் காலிமுகத்திடலில் நிரப்பி தமது ஜனாதிபதி தேர்தல் போட்டியை ஆரம்பித்தது தேசிய மக்கள் சக்தி அமைப்பு. 

Related image

2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தனித்து களமிறங்குவதாக அறிவித்திருந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், இளைஞர் அணியினர், பெண்கள் நலன் அமைப்பு, சுகாதார சேவயர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் வடக்கு கிழக்கு தேற்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள்  ஒன்றிணைந்த 'தேசிய மக்கள் சக்தி" யின் மாநாடு இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. 

இலங்கையில் சகல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று காலிமுகத்திடலில் தமது ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் மக்கள் கூட்டத்தில் கலந்க்துகொண்ட்னர். இந்த நிகழ்வில் முக்கிய பிரதிநிதிகளின் உரை இடம்பெற்றது.  

இதன்போது தேசிய மக்கள் சக்கிதியின் கொள்கைத்திட்டமும் வாசிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு தமிழ் சிங்கள மொழிகளில் அறிவிக்கப்பட்டது.

 இதன்போது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசநாயாக அறிவிக்கப்பட்ட வேளையில் அனுரகுமார திசாநாயக மேடைக்கு வருகைதந்தார். மக்களின் பலத்த கரகோஷத்துடன் மக்களின் உற்சாகமான  வரவேற்புடன் தனது தலைமைத்துவத்தை ஏற்றுகொண்ட அவர் தனது பிரதான உரையை நிகழ்த்தினார்.  "எம்மை நம்பி கைகோர்க்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம்" என்ற பிரதான அறைகூவலுடன் தனது உரையினை அவர் முடித்துக்கொண்டார். இறுதியாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உரையாற்றினார்.