உலகநாடுகளில் இன்று சுமார் 711 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி தகவல் பரிமாறும் அப்ஸ்களில் ஒன்றான வைபர், அதன் மிகச்சிறந்த 5 ஸ்டிக்கர் சந்தைகளுள் ஒன்றாக இலங்கையை அறிவித்துள்ளது.

கடந்தாண்டு உலகம் முழுவதும் 22 பில்லியன் ஸ்டிக்கர்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதுடன்,  இலங்கையில் மாத்திரம் 600 மில்லியனுக்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. 

பதிவு செய்யப்பட்ட 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களுடன் இலங்கையில் தொடர்ச்சியாக வைபர் வளர்ச்சியடைந்து வருவதுடன், தற்சமயம் இலங்கையிலுள்ள தலைசிறந்த app களில் ஒன்றாகவும் உள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக வைபரின் முன்னுரிமை சந்தைகளுள் ஒன்றாக இலங்கை மாற்றமடைந்துள்ளதுடன், இலங்கையின் மிகப்பெரிய டிஜிட்டல் தகவல் தொடர்பாடல் செயலிகளிலும் ஒன்றாகவுள்ளது.

பாவனையாளர்களின் தொடர்பாடல் முறையில் ஸ்டிக்கர்கள் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. தொடர்பாடலின் போது தம்மை மேலும் சிறப்பாக வெளிப்படுத்துவதற்கான பிரத்தியேக உந்துதலை பாவனையாளர்களுக்கு இவை வழங்குகின்றன.

வைபர் அண்மையில் தமிழ் புத்தாண்டு காலத்தில் ரூபா 10,000பெறுமதியான ஸ்டிக்கர்களை இலவசமாக வழங்கியிருந்தது. இந்த புத்தாண்டு காலத்தில் மாத்திரம் 6 மில்லியன் ஸ்டிக்கர்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

புதிய உள்நாட்டு ஸ்டிக்கர் பொதிகளை வெளியிடும் வகையில் இலங்கையில் வேறு பல வர்த்தக நாமங்களுடன் கைகோர்க்கும் செயல்பாடுகளில் வைபர் ஈடுபட்டு வருகிறது. Nestle நிறுவனம் அண்மையில் வைபருடன் இணைந்து ‘சிங்களம்-தமிழ் புத்தாண்டு’ காலத்தில் அதன் முதலாவது உள்நாட்டு ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் Nestle உடன் இணைந்து முன்னெடுத்த எமது முதலாவது உள்நாட்டு ஸ்டிக்கர் திட்டம் மகத்தான வெற்றியை கண்டுள்ளது. இதனை பாவனை புள்ளிவிபரங்கள் சான்று பகர்கின்றன. வைபரின் ஸ்டிக்கர் பொதிகளுக்கான அற்புதமான புதிய கூறுகளை ஏற்படுத்தக்கூடிய பலபுதிய நிறுவனங்களுடன் கைகோர்ப்புகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

இலங்கையிலுள்ள பல்வேறு வர்த்தகநாமங்களுடன் எமது இணைப்பை நாம் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன் எமது பாவனையாளர்களுக்கு மதிப்பு சேர்க்கவுள்ளோம்” என வைபரின் தெற்காசிய நாடுகளுக்கான பிராந்திய தலைமை அதிகாரி அனுபவ் நாயர் தெரிவித்தார்.