(இராஜதுரை ஹஷான்)

  பரந்துப்பட்ட கூட்டணிக்கான  யாப்பு தொடர்பிலான  தீர்க்கமான தீர்மானத்தை மேற்கொள்ளும் கலந்துரையாடல்  நாளைமறுதினம் (செவ்வாய்கிழமை) இடம் பெறும். சுதந்திர கட்சியுடனான  கூட்டணி கொள்கையுடன்  பலப்பட வேண்டும்  என்பதற்காகவே  கூட்டணி விவகாரம் பொருமையுடன் கையாளப்படுகின்றது.

இவ்வாரத்திற்குள்  கூட்டணி தொடர்பில் உறுதியான தீர்வு எட்டப்படும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர்  பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பரந்துப்பட்ட கூட்டணி குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு தற்போது உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   எமது தரப்பு வேட்பாளர்    மத தலைவர்களினால்   ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.  65 இலட்சத்திற்கும் அதிகமான   வாக்குகளை பெறுவதற்கு எதிர்ப்பாரத்துள்ளோம். தமிழ் மக்கள்     நிச்சயம்    இம்முறை  அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளுக்கு ஏமாறமாட்டார்கள்.

 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடமான பரந்துப்பட்ட கூட்டணி இதுரையில் வெற்றிப் பெறும் தருவாயில்  காணப்படுகின்றது.   சுதந்திர கட்சியுடன்  இணைந்து செயற்படுவதற்கு எதிரணியின் அனைத்து தரபபினரும்  இணக்கம் தெரிவித்துள்ளனர். ஆனால் சுதந்திர கட்சிக்குள்  இன்று  பல தரப்பினர் பல தேவைகளை பொருட்டே செயற்படுகின்றார்கள்.

 ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்து தவறான அரசியல் தீர்மானத்தை முன்னெடுத்த சுதந்திர கட்சி மீண்டும் அந்த தவறினை செய்யாது என்று எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக  பலமான  அரசாங்கத்தை அமைப்பதே எமது பிரதான இலக்காகும் என்றார்.