இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் இடம்பெற்ற 6 ஆவது பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் சாம்பியனாகியுள்ளது.

இங்கிலாந்தின் உஸ்டன் நகரில் நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய பொலிஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றே இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி சாம்பியனானது.

பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டித் தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 9 பொலிஸ் அணிகள்  பங்கேற்றிருந்த நிலையில், இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி கிண்ணத்தை வென்றுள்ளது.

இதேவேளை, ஆசிய பொலிஸ் கிரிக்கெட் கிரிக்கட் அணி ஒன்று, உலக பொலிஸ் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கிண்ணம் வெல்வது இதுவே முதல்முறையென்பது குறிப்பிடத்தக்கது.