எல்ல - கபரகல பகுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை எல்ல - கபரகல பிரதேசத்தின், ராவின்ன என்ற இடத்தில் சுமார் 350 மீற்றர் அடி பள்ளத்தாக்கில் முச்சக்கர வண்டியொன்று குடை சாய்ந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 35 வயதுடைய தந்தையும், 8 வயதுடைய மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேற்படி விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதியும் அவரின் மகனும் உயிரிழந்துள்ளதோடு, குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த 8, 12 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதிக வேகத்துடன் பணித்த குறித்த முச்சக்கர வண்டி, வேகக்கட்டுப்பாட்டை இழந்தாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்,  மேற்படி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.