தென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளரான ரஸல் டொமிங்கோ பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையில் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Related image

ரஸல் டொமிங்கோ தென் ஆபிரிக்க A அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஸல் டொமிங்கோ எதிர்வரும் 21 ஆம் திகதி ழுதல் தனது  பங்களாதேஷ் அணிக்கான பயிற்றுவிப்பாளர் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் தலைமை பயிறுவிப்பாளர் பதவிக்கு  ரஸல் டொமிங்கோவை தவிர மைக் ஹெஸன் மற்று மிக்கி ஆதர் ஆகியோரும் இம்முறை விண்ணப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹத்துருசிங்க அன்மையில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில், அவர் மீண்டும் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தெரிவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

எனினும் குறித்த பதவி தற்போது தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரான ரஸல் டொமிங்கோ வசம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.