கூட்டுறவு மனிதாபிமான அடிப்படையிலே நாகரீகத்தை கொண்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். 

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்கள் இணைந்து வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (17) ஏற்பாடுசெய்த சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கூட்டுறவு சங்கங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தானை வங்கியொன்றை நாம் உருவாக்கவுள்ளோம். அவ்வாறாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி உருவாக்கப்படவுள்ளது.

 இந்த வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் நோக்கம் நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணியை இன்னும் சிறப்பாக வலுவாக சரியாக செய்வதற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வழிமுறைகளை நீங்கள் கற்றுக்கொள்வதாகும்.

 இது அடிமட்டத்திலிருந்து வளர்த்தெடுக்கவேண்டிய ஒருவங்கியாக காணப்படுகின்றது என்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.