வவுனியா ஓமந்தை பறநட்டகல் பகுதியில் புனித அந்தோனியார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு பங்குத்தந்தை தலைமையில் இன்று (17.08.2019) இடம்பெற்றது.

 

ஓமந்தை பனிக்கர்புளியங்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதனின் கம்பெரலியா கிராம அபிவிருத்தி நிதிப்பங்களிப்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய இன்மானுவேல் பெர்னாண்டோவினால் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலா கோகிலகுமார், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், ஆலய பங்கு மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.