சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதி அருகே கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலியான நிலைளில் மேலும் இருவரை காணவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர்  பலி

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருந்து சென்ற கப்பல் ஒன்று, இயற்கை சீற்றம் காரணமாக நேற்று மாலை 6 மணியளவில் ரிசாவோ நகர துறைமுகம் அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  

இது குறித்து மீட்புப்படை அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இவ்விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது, இந்த விபத்து நிகழ்ந்த போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசியது’, என தெரிவித்தனர்.