மலத்தை வெளியேற்றுவதற்கு நாம் இயல்பான முயற்சியை விட கூடுதலான முயற்சியை மேற்கொள் கிறோம். இத்தகைய தருணங்களில் மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியிலுள்ள இரத்த நாளங்கள் தங்களின் வலிமையை இழந்து. இரத்தபோக்கிளை வெளிப்படுத்துகின்றன. இதனைத்தான் Piles எனப்படும் ஆசனவாய் இரத்தநாள தளர்வு பாதிப்பு ஏற்படுகின்றது என வைத்தியர் அசோக் தெரிவித்தார். 

எங்களின் உணவு பழக்கவழக்கத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம்.  பட்டைத்தீட்டப்பட்டு, நார்ச்சத்து நீக்கப்பட்ட அரிசியைத்தான் குக்கரில் வேகவைத்து சத்துக்களேயில்லாத சாதமாக பசியாறுகிறோம். 

அத்துடன் உடலுக்கும், குடல் மற்றும் மலக்குடலின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் மைதா சேர்க்கப்பட்ட உணவுப்பொருளை விரும்பி கால வேளைகளிலும் வயிறார உட்கொள்கிறோம். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது. அதாவது உடலிலிருந்து வெளியேறவேண்டிய இறந்துபோன செல்கள் மற்றும் பித்தநீருடன் கலக்கப்பட்டிருக்கும் இறந்து போன செல்கள் மலக்குடல் பகுதியில் தேக்கமடைந்து, மலச்சிக்கலை உருவாக்குகின்றன.

இந்நிலையில் மலத்தை வெளியேற்றுவதற்கு நாம் இயல்பான முயற்சியை விட கூடுதலான முயற்சியை மேற்கொள்கிறோம். இத்தகைய தருணங்களில் மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியிலுள்ள இரத்த நாளங்கள் தங்களின் வலிமையை இழந்து. இரத்தபோக்கிளை வெளிப்படுத்துகின்றன. இதனைத்தான் Piles எனப்படும் ஆசனவாய் இரத்தநாள தளர்வு பாதிப்பு என்று குறிப்பிடுகிறோம்.

மலம் வெளியேறும் முன் அதனை வெளியேற்றுவதற்கு கடினமாக முயற்சி மேற்கொள்வதும், மலம் கழித்த பிறகு இன்னும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும் இதன் அறிகுறியாக கொள்ளலாம்.

மலத்துடன் ஒன்று முதல் பத்து சொட்டு அல்லது இருபது மி.லீ வரை இரத்தப்போக்கும் உண்டாகும். மலம் கழித்த பின்னரும் இரத்தப் போக்கு சிலருக்கு ஏற்படும். மலம் கழித்து மூன்று மணித்தியாலம் வரை ஆசனவாயில் வலி அல்லது எரிச்சல் நீடிக்கும்.சிலர் உள்ளிருந்து கட்டிப் போல் ஒரு உடல் உறுப்பு வெளியே வருவதும், அதனை கைகளால் உள்ளே தள்ளவும் செய்திருப்பார்கள்.

உள்மூலம் மற்றும் வெளி மூலம் ஆகிய இரண்டிற்கும் அறிகுறிகள் ஒன்றாகத்தான் இருக்கும்

இதனை proctoscope என்ற கருவி மூலம் ஆசனவாய் வழியாக உள்ளே செலுத்தி, அங்கு எந்த பகுதியில் உள்ள இரத்தநாளங்களில் வீக்கம் அல்லது தளர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாக கண்டறிவார்கள்.

ஆரம்ப நிலையில் இத்தகைய பாதிப்பினை கண்டறிந்தால், உணவின் மூலமும், உணவு கட்டுப்பாட்டின் மூலமும், உணவு பழக்கவழக்கத்தில் மூலமும் இதனை முழுமையாக குணப்படுத்தி கொள்ளலாம், குறிப்பாக மலமிளக்கியாக செயற்படும் நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள், களிம்பு ஆகியவற்றைக் கொண்டு இதனை குணப்படுத்தலாம்.நோய் பாதிப்பு முற்றிய நிலையில், சிறு துளை சத்திரசிகிச்சை மூலம் நவீன சத்திர சிகிச்சையை செய்து இதனை குணப்படுத்திக் கொள்ளலாம்.