குருநாகல் கொபேகன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டியதலுவ பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கொபேகன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நம்முவாவ, மீரிகமவத்த பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் கொபேகன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.