சிகிச்சை பெற வந்த 3 வயது குழந்தைக்கு எயிட்ஸை பரிசளித்த மருத்துவமனை

Published By: Raam

12 May, 2016 | 11:16 AM
image

அஸ்ஸாம் மாநில மருத்­து­வ­ம­னை ஒன்றில் 3 வயது சிறு­வ­னுக்கு சிகிச்­சையின் போது அளிக்­கப்­பட்ட இரத்­தத்தால் எய்ட்ஸ் நோய் பர­வி­யுள்­ளமை பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கவு­காத்தி அரசு மருத்­து­வ­ம­னையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம், குறித்த குழந்தை உடலில் 40 சத­வி­கித தீக்­கா­யங்­க­ளுடன் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டது. அங்கு 5 மாதங்கள் நடைபெற்ற சிகிச்­சையை அடுத்து கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் 3ஆம் திகதி மருத்­து­வ­ம­னையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்­பிய குழந்தை கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி, மீத­முள்ள சிகிச்­சைக்­காக மீண்டும் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டது. இதன்­போது எடுத்த இரத்த பரி­சோ­த­னையில், அக்­கு­ழந்­தைக்கு எச்.ஐ.வி (எய்ட்ஸ்) உள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

தீக்­கா­யங்­க­ளுக்­காக நடந்த சிகிச்­சையின் போது அச்­சி­று­வ­னுக்கு பல்­வேறு முறை இரத்த பரி­மாற்றம் நடைபெற்றுள்­ளது. இதன்­போதே அச்­சி­று­வ­னுக்கு இரத்தம் மூலம் எச்.ஐ.வி பர­வி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மருத்­து­வர்கள் இது­பற்றி கூறு­கையில், அக்­கு­ழந்தை கடந்த ஆண்டு சிகிச்சை முடிந்து சென்ற பின்னர், 6 மாதங்கள் கழித்தே மீண்டும் சிகிச்­சைக்­காக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வரப்­பட்­டது. எனவே, அந்த 6 மாத காலத்தில் என்ன நடந்­தது என்று எங்­க­ளுக்கு தெரி­ய­வில்லை. மேலும், எங்கள் இரத்த வங்­கியில், எய்ட்ஸ் பாதிக்­கப்­பட்ட இரத்தம் இருக்க வாய்ப்­பில்லை. எனினும், இரத்த வங்­கியில் இது தொடர்­பான விசா­ரணை தற்­போது நடைபெற்று வரு­கி­றது என தெரி­வித்­துள்­ளனர்.

குழந்­தையின் தாய் கூறு­கையில், நாங்கள் மிகவும் பயத்­திலும் வருத்­தத்­திலும் இருக்­கிறோம். எங்கள் மகனின் எதிர்­காலம் என்­ன­வாகும் என்ற அச்­சத்தில் இருக்­கிறோம். நாங்கள் ஏழை குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள், தற்­போது இந்த மருத்­துவ செலவை எப்­படி ஏற்க போகிறோம் என தெரி­ய­வில்லை என கூறி­யுள்ளார். பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்த விடயம் தொடர்­பாக விசா­ரிக்க, 5 பேர் கொண்ட மருத்­துவ குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 2013ஆம் ஆண்டு, அஸாமில் உள்ள தராங் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், இரத்த வங்கியில் இருந்து இரத்தம் பெற்ற 4 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47