அரச மரக் கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாண்டு நிறைவு விழாவுடன் இணைந்ததாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அனுராதபுரம் புதிய பிரதேச அலுவலகம் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவால் இன்று (17) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார். இந்த நிகழ்வை நினைவுகூரும் முகமாக அவ் அலுவலக வளாகத்தில் ஜனாதிபதியால் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.

அமைச்சர் சந்திராணி பண்டார, இராஜங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியு.பி.ஏக்கநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிலுக்கா  ஏக்கநாயக்க, பொது முகாமையாளர் கலாநிதி நிமல் றுவான் பத்திரன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.