இந்­திய கிரிக் கெட் சபை தலை வர் பதவி மற்றும் ஐ.சி.சி. தலைவர் பத­வியை நேற்று ஷசாங்க் மனோகர் ராஜி­னாமா செய்தார்.

அவரின் இந்த திடீர் முடிவு பல­ரையும் ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது. ஐ.சி.சி. தலைவர் பத­விக்கு போட்­டி­யி­டு­வ­தற்­காக இந்­திய கிரிக்கெட் சபைத் தலைவர் பத­வியை ராஜி­னாமா செய்­த­தாக கூறப்­ப­டு­வதை ஷசாங்க் மனோகர் மறுத்­துள்ளார்.

தனது ராஜி­னா மா குறித்து ஆங்­கில தொலைக்­காட்சி ஒன்­றுக்கு அளித்­துள்ள பேட்­டியில் “தற்­போ­தைய சூழ்­நி­லையில் என்னால் வேலை செய்ய முடி­ய­வில்லை. நான் யார் பெய­ரையும் குறிப்­பிட்டு கூறவிரும்­ப­வில்லை. ஆனால் ஒரு விஷ­யத்தை என்னால் கூற­மு­டியும், நிர்ப்­பந்தம் கார­ண­மா­கத் தான் பதவி வில­கினேன்.” என்று தெரி­வித்­துள்ளார்.

தற்­போது செய­லா­ள­ராக இருக்கும் அனுராக் தாக்கூர் பி.சி.சி.ஐ.-யின் அடுத்த தலை­வ­ராக வெற்றிப் பெற வாய்ப்பு உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.