ஜனா­தி­பதி தேர்தலுக்­கான கட்சி வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்தும்  திரு­விழா கோல­க­ல­மாக இடம் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.  

பொது­ஜன பெர­முன உத்­தி­யோகபூர்­வ­மாக தனது வேட்­பா­ளரை அறி­வித்­து­விட்­டது. அமைச்சர் சஜீத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­துபோல்  ஐக்­கிய தேசி­யக்­கட்சி பது­ளையில்  நடத்­திய வர­வேற்பு வைப­வமும்  இரு பிர­தான கட்­சி­களின் முடிவை அறி­வித்த நிலையில்  தமிழ்மக்கள் இந்த ­வேட்­பா­ளர்கள் தொடர்பில் என்ன முடிவு எடுக்­கப்­பே­ா கி­றார்கள். தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு இவர்­களில் எந்த வேட்­பா­ளரைக் கைநீட்­டிக்­காட்­டப்­போ­கி­றது என்­பதை அறி­வதில்  மக்கள் ஆர்­வ­மாக இருக்­கி­றார்கள்.  அது­போ­லவே போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களும் கட்­சி­களும் கூட்­ட­மைப்பின் முடி­வுக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதும் சரி­யான கணிப்­பாக இருக்கும்.

  2005 ஆம் ஆண்டு தேர்தல் தொடக்கம் நடை­பெ­ற­வுள்ள இந்த தேர்தல்­வரை இது­ ஒரு ஆர்­வ­மான எதிர்பார்ப்பு என்­ப­தை­விட அவ­சி­ய­மான ஒன்றாகவும் இருந்து வந்­த­மையே அதற்கு காரணம். தமிழ்மக்­க­ளு­டைய முடிவை எதிர்­பார்த்து போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ளர்­களும்  ஜனா­தி­பதி தேர்தலில் வெற்றி பெறப்­போ­கி­றவர் தமிழ்மக்­க­ளுக்கு என்ன தரப் ­போ­கி­றார்கள், என்ன செய்­வார்கள் என ஏங்­கிய தமிழ்மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்பும்   கடந்த கால அனு­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக கொண்­டது.  எதிர்­பார்த்­தது, ஏமாந்­தது போன­ விட­யங்கள் மறந்­து­விட முடி­யா­தவை. 

ஜனா­தி­பதி தேர்தல் ஒன்றில் வெற்­றி­ பெ­ற­ சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ர­வைப் பெற வேண்டும் என்­பது தமிழ், முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரின் தர்க்கம். குறிப்­பாக தமிழ்மக்­க­ளு­டைய ஆத­ர­வின்றி எந்­த­வொரு வேட்­பா­ளரும் ஜனா­தி­பதி கதி­ரையைக் கைப்­பற்ற முடி­யாது என்ற அசைக்க முடி­யாத நம்­பிக்கை தமிழ் தரப்­பி­ன­ருக்கு உள்ளது. அதே­வேளை முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை யார் பெறு­கி­றார்­களோ அவர்­களே ஜனா­தி­ப­தி­யாக முடி­யு­மென்­பது முஸ்லிம் கட்­சி­க­ளின் நம்­பிக்கை. மறு­புறம் மலை­யக மக்கள் நினைக்கும் ஒரு­வரே அக்­க­தி­ரைக்கு உரித்­து­டை­யவர் ஆக முடி­யு­மென்­பது மலை­யகத் தலை­வர்­க­ளு­டைய வாதம்.

  ஆனால் எந்­த­வொரு சிறு­பான்மை சமூ­கத்­தி­னு­டைய ஆத­ர­வு­மின்றி சிங்­கள   இனத்தின் ஆத­ர­வுடன் சிங்­கள இராஜ்­ஜி­ய­மொன்றை  எம்மால் அமைக்க முடியும் என்ற அகங்­கா­ரத்­துடன் அண்­மையில் பேசப்­பட்ட விட­யங்­க­ளையும் நாம் மறந்­து­வி­டலாகாது. 

  இம்­முறை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்தல், பல கோணங்­களில் நின்று அவ­தா­னிக்­கப்­பட்­டு­வரும் ஒன்றாக மாறி­யி­ருக்­கி­றது. ஒன்று பொது­ஜன பெர­மு­ன­வென்ற புதிய கட்சி மூத்த கட்­சி­க­ளுக்கு சவா­லாக மாறி­யி­ருப்­பது; இரண்­டா­வது, புதிய தலை­மு­றைகள் தலை­நீட்டத் தொடங்­கி­யுள்ள தேர்தலாக இது மாறி­யி­ருப்­பது. மூன்­றா­வது, குறித்த ஜனா­திபதி வேட்­பா­ளர்­களில் தமிழ்மக்கள் யாரை ஆத­ரிக்­கப்­போ­கி­றார்கள் என்­பது.  ஒட்­டு­மொத்த சிறு­பான்மை சமூ­கத்­தையும் வசீ­க­ரிக்­கப் ­போ­கிற வேட்­பாளர் யார் என்­பது இன்­னொரு விட­ய­ம்.

    இலங்கை  வர­லாற்றில் அர­சியல் கட்­சி­களின் தோற்­ற­ம் என்­பது சுதந்­திர எழுச்­சிக்­கா­ன­தா­க, அல்லது சமூக மாற்­றத்­துக்­கா­ன­தாக­ உரு­வா­கி­ய­தல்ல. பிரிட்டிஷார் அமைத்த  பாரா­ளு­ம­ன்­றத்தை சுதே­சிகள் ஆள­வேண்­டு­மென்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டது. அந்த வகையில் படித்த புத்­தி­ஜீவி வர்க்­கத்தால் உரு­வாக்­கப்­பட்ட இட­து­சாரி கட்­சிகள் மேலா­திக்க சிந்­தனை கொண்­ட­வர்­களால் தோற்­று­விக்­கப்­பட்ட வல­து­சாரிக் கட்­சிகள் தேசிய வாதத்­துக்கு அப்பால் இன, மொழி உரி­மைசார் விட­யங்­க­ளுக்­காக தோற்றம் பெற்ற கட்­சி­க­ளென அவற்றின் தோற்­றங்கள் பல­த­ரப்­பட்­ட­தாக இருக்­கி­ன்றன. பொது­ஜன பெர­மு­ன­வென்­பது மூத்த கட்­சி­களின் ஆதிக்­கத்தை உடைக்­க­ வேண்­டு­மென்­ப­தற்­காக ஒரு குழு­வி­னரால் உரு­வாக்­கப்­பட்ட கட்சி. இதன் அனு­பவம், வயது பாலகத்தன்மை கொண்­டது. அவ்­வாறு இருக்­கும்­போது மூத்த கட்­சி­களை மித­மிஞ்சி நிற்கும் அள­வுக்கு நிலை­மைகள் மாறி­யி­ருக்­கி­ன்றன.

   ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யி­லி­ருந்து உடைந்து சுதந்­தி­ரக்­கட்­சியை பண்­டா­ர­நா­யக்கா உரு­வாக்­கினார். அது உடைந்து காலப்­போக்கில் ஐக்­கிய சுதந்­தி­ர ­முன்­னணி, சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பு என ஏதேதோ வடி­வங்­களில்  உரு மாற்றம் பெற்­றது. அதே கட்­சிக்கு தலைமை தாங்கி ஜனா­தி­பதி பத­வியை சுவீ­க­ரித்­துக்­கொண்ட மஹிந்த ராஜ­பக்ஷ இன்று பொது­ஜ­ன­பெ­ர­மு­னவின் தலை­வ­ராகி தனது தம்பி கோத்­த­பா­ய­ ரா­ஜ­ப­க்ஷவை கட்சி சார்பில் வேட்­பா­ள­ராக களம் இறக்­கி­யி­ருக்­கிறார்.

  இலங்­கையின் மூத்த கட்­சி­யென்று பெருமை பேசிக்­கொண்­டி­ருக்கும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தனது வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வதில் பல்­வேறு சவால்­களைச் சந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. இன்னும் தனது வேட் ­பாளர் யார் என்­பதை அறி­விக்க திறா­னி­யற்று தடு­மா­று­வது ஒரு­பு­ற­மா­கவும் எதிரே நிற்கும் பொது­ஜன பெர­முன வேட்­பா­ள­ருக்கு ஏற்ற ஒரு­வரை சவா­லாக நிற்­க­வைக்க முடியு மென்று சொல்ல முடி­யாமல் தடு­மா­று­கிற அள­வுக்கு நிலை­மைகள் குழம்­பியகுட்டையாகிக் கிடக்கிறது.   

ஜனா­தி­பதி வேட்­பாளர் தெரிவு தொடர்பில்  எல்­லாத்­த­ரப்­பி­னரும் உறு­தி­யான முடிவை எடுக்க முடி­யாமல் தடு­மா­றிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்கு அண்­மையில் நடந்த பல சம்­ப­வங்கள் உதா­ர­ணங்களாகின்றன. 

  ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியின் தலைவர் ரணி­லுக்கும் பிர­தித்­த­லைவர் சஜித்­துக்கும் இடையில் இன்னும் உடன்­பாடு காண முடி­ய­ வில்லை. பனிப்போர் இன்னும் முடி­வுக்கு  ­வ­ரவில்லை. கட்­சியின் தலை­வ­ருக்குப் பிரதி தலை­வரை முதன்­மைப்­ப­டுத்த உடன் ­பா­டில்லை. ஆனால் கட்­சியின் அநேக தரப்­பினர் கையெ­ழுத்­திட்டு  செயற்­குழு மற்றும் பாரா­ளு­மன்ற குழு­வைக்­கூட்டி  வேட்­பா­ளரை தெரிவு செய்­யுங்கள் என அழுத்­தம் கொடுத்து  வரு­கி­றார்கள்.  தலைவர் ரணில் விக்­­ர­ம­சிங்­க­வைப் ­பொ­றுத்­த­வரை கோரிக்­கையை  உதா­சீனம் செய்­ய­ மு­டி­யா­மலும் உடன்­பட முடி­யா­மலும் தளம்­பிக்­கொண்­டி­ருக்­கிறார் என்­பது தகவலறிந்த உண்மை. தனி­ய­றையில் சந்­தித்து பேசி­யி­ருக்­கி­றார்கள். தூதுக்­கு­ழ­வினர் தூது சென்­றுள்­ளனர். சஜித்தின் ஆத­ர­வா­ளர்கள் தங்கள் தலை­வ­ருக்கு இருக்கும் ஆத­ரவை பறை சாற்­றிக்­காட்டும் வகையில் பது­ளையில் ஒரு வர­வேற்பு வைப­வத்­தையும் நடத்­திக்­காட்­டி­யி­ருக்­கி­றார்கள். எது­வாக இருந்­தாலும் மக்கள் கருத்து, ஆத­ர­வா­ளர்கள் விருப்பம், கட்சிப் பெரும்­பான்­மையின் முடிவு என்று வரும்­போது தலைவர் ரணில் தனது முடிவை  மீள் ­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டி­வரும் அல்­லது மேற் கண்ட தரப்­பி­னரின் கருத்­துக்கு உடன்­பட்டுத் தான் ஆக­வேண்­டு­மென்ற நிலையே உரு­வா­கிக்­கொண்­டி­ருக்­கி­றது.

இதே நிலை­யொன்றே பொது­ஜன பெர­முன கட்­சிக்கும் இருந்து வந்­துள்­ளது. ஐந்து வேட்­பா­ளர்கள்   முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள் நாட்­டுக்குப் பொருத்­த­மான ஒரு­வரை அறி­விப்பேன் என்று மஹிந்த தெரி­வித்த  வாக்­கு­றுதி மாறி, ”நான் வேட்­பா­ளரைத் தெரிவு செய்­ய­வில்லை மக்­க­ளா­கிய நீங்­களே தெரிவு செய்­துள்­ளீர்கள்” என்று முடிவை மக்கள் தலையில் போட்டு மஹிந்த தனது சாணக்­கி­யத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பதும் ஒரு­வகை ராஜ­தந்­தி­ரந்தான். 

 இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் தமிழ் மக்கள் இந்த தேர்தலில் எடுக்­க­வி­ருக்கும் முடிவு அல்­லது தமிழ்மக்­களின் ஏக பிர­தி­நி­தி­க­ளாக கரு­தப்­ப­டு­கிற தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு எடுக்கப் போகும் முடி­வு­, எத்திசை நோக்கி நக­ரப்­போ­கிறது என்­ப­தே தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை. 

   தமிழ் மக்­களின் ஆத­ர­வின்றி பொது­ஜன பெர­முன வேட்­பா­ள­ரான முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஜன­தி­பதி தேர்தலில் வெற்­றி­பெற முடி­யாது என  கூட்­ட­மைப்­பினர் அடித்து கூறி­யி­ருக்­கி­றார்கள். ”ஜனா­தி­பதி தேர்தலில் யாரை ஆத­ரிப்­பது என்ற முடி­வை நாம் இன்னும் எடுக்­கவில்லை.சரி­யான நேரத்தில் சரி­யான முடிவை எடுப்­போ­ம்” எனத் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பின்­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­ன  எம். ஏ சுமந்­திரன் மட்­டக்­களப்­பில் கூறி­யுள்ளார்.

  கடந்தகால அனு­ப­வங்­களின் அடிப்­ப­டை­யிலும் இன்­றைய கட்­சி ­வேட்­பா­ளர்கள்  தெரி வின் அடிப்­ப­டை­யிலும் கூட்­ட­மைப்பு எடுக்­கக்­கூ­டிய நிலைப்­பாடு எது­வாக இருக்க முடியும்? அதன் எதிர்­கால சாதக பாதக நிலை எவ்­வாறு அமையும்? போன்றவை மிக அறிவுபூர்­வ­மாக சிந்­திக்க வேண்­டிய விட­ய­ங்கள். கடந்த காலத்தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­களின் அடைவு மட்டம் தமிழ்மக்­களின் அபி­லா­ஷை­க­ளையும் எதிர்­பார்ப்­பு­க­ளையும் எந்­த­ளவு தூரம் அர்த்த மற்ற நிலைக்கு தள்ளியது  என்­ப­தைச் சொல்லித் தெரிய வேண்­டியதில்லை.

   2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தலின்­போது ஏட்­டிக்குப் போட்­டி­யாக நின்­ற­வர்கள் மஹிந்த ராஜ­ப­க்ஷவும் ரணில் விக்ரமசிங்­கவும். சுதந்­தி­ரக்­கட்­சி­யின் ­வேட்­பா­ள­ராக தன்னை அறி­முகம் செய்து கொண்ட மஹிந்த ராஜ­பக்ஷ, தான் தமிழ்மக்­க­ளுக்கு விரோ­தியல்ல  என்ற தோர­ணையில் அடக்கி வாசித்­தது மாத்­தி­ர­மல்ல விடு­த­லைப்­பு­லி­க­ளையோ அல்­லது தமிழ் மக்­களின் போராட்­டங்­க­ளையோ அதி­க­மாக விமர்­சிக்­காமல் மிக சாது­வான ஒரு வேட்­பா­ள­ராக களம் இறங்­கினார். இவ­ருக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கு­ம் இ­டையில்  ர­க­சி­ய­மான பேச்­சுவார்த்தை­களும் உடன்­ப­டிக்­கை­களும் இடம்பெற்­ற­தாக பல வதந்­தி­கள் உலாவின. தாறுமாறாக செய்­திகள் வெளிவந்தன.

இதே­வேளை, 2002 ஆம்­ ஆண்டு விடு­த­லைப்புலி­களுக்குப் பிர­தமர் ரணில் விக்­ரமசிங்­கவுக்கும் இடையே நடை­பெற்ற புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் தோற்­றுப்­போன நிலையில் விடு­த­லைப்­ப­லிகள் ரணில் விக்­ரமசிங்­க­வுக்கு ஆத­ரவு நல்­குங்கள் என தமிழ்மக்­க­ளிடம் கேட்கவும் தயா­ராக இல்­லாத நிலையில் மஹிந்த வெற்­றி­ வாய்ப்­பைப்­பெற்­றுக்­கொண்டார். இந்தத் தேர்தலில்  மஹிந்த ராஜ­பக்ஷ 50.29 சதவீத வாக்­கையும் ரணில் விக்­ரமசிங்க 48.43 சதவீத வாக்கையும் பெற்ற நிலையில் மேல­தி­க­மாக 180,786 வாக்­குக்­களால் மட்­டுமே மஹிந்த வெல்ல முடிந்­தது. வடக்கு கிழக்கு மக்­களை விடு­த­லைப்­பு­லிகள் சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிக்­க ­விட்­டி­ருந்தால், ரணில் வென்­றி­ருப்பார். நிலை­மைகள் மாறி­யி­ருக்கும் என்ற கருத்துக் கூறு­வோரும்  இன்­று ­இருக்கத்தான் செய்கின்றனர். இதே போன்­ற­தொரு நிலைதான் 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்­த­லிலும் இடம் பெற்­றது. மஹிந்­த­வுக்கு சம­பலம் கொண்ட ஒருவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற கருத்தும் அபிப்­பி­ரா­யமும் வலு ­பெற்ற நிலையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆத­ர­வுடன் இராணு­வத்­த­ள­பதி சரத் பொன்­சேகா நிறுத்­தப்­பட்டார். இந்த வேட்­பா­ள­ருக்கு மறை முக­மாக சிறு­பான்மை கட்­சி­யி­னரும் ஆத­ரவு நல்­கி­னார்கள். குறிப்­பிட்­டுக்­கூ­று­வ­தானால் கூட்­ட­மைப்பின் ஆத­ரவும் மறை­மு­க­மாக சரத் பொன்­சே­கா­வுக்­கே­யி­ருந்­தது.

   யுத்­தத்தை வெற்றிகொண்ட தலை­வ­ருக்கும் யுத்­தத்­துக்குத் தலைமை தாங்­கி­ய­வ­ருக்­குமி­டையில் நடை­பெற்ற அந்தப் ­போட்­டியில்  நடந்­தது என்­னவோ மாய­மாகவே இருந்­த­தாக அர­சியல் விமர்­ச­கர்கள் அச்சமயம் கருத்து தெரி­வித்­தி­ருந்­தார்கள்.

     சிங்­கள இராஜ்­ஜி­யத்தை வென்று கொடுத்த தலை­வ­ருக்கு மக்கள்  தேர்தலில் தமது விசு­வா­சத்­தைக் ­காட்­டி­னார்கள். அந்த ஆட்­சி­யா­ளரின்   ஐந்து வ­ரு­டங்­களும் தமிழ்மக்­களுக்கு சிம்மசொப்பனமாகவே இருந்­தது. தமிழ்மக் கள் மாத்­தி­ர­மல்ல, முஸ்லிம் சமூ­கத்­த­வர்களும் போராட்­டங்களை எதிர்­கொள்ள வேண்டியிருந்தது. இதன்பின் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தலில் இரு­தே­சி­யக்­கட்­சிகள்  ஒன்றிணைந்து, ”பொது வேட்­பாளர் மூலம் தேசத்தை காப்­பாற்­றி­யுள்ளோம்”என்று கூறி­னார்கள். ”தமிழ்மக்­களின் நீண்டகாலப்­பி­ரச்சி­னைக்கு நிரந்­த­ரத்­தீர்வு காண்போம். அதை அர­சியல் யாப்பின் மூலம் நிவர்த்தி செய்வோம்” என முழங்கினார்கள்.         

இன்று தமிழ்மக்கள் மத்­தியில்  எழுந்­துள்ள பாரிய சவா­லாகியிருப்பது யாரை நம்­பு­வது, யாருக்கு ஆத­ரவளிப்­பது என்பதா, அல்லது தேர்தலைப் புறக்­க­ணித்து ஒதுங்­கிப்­போய்­ வி­டு­வதா என்­ப­தே. இந்த மூன்று விவ­கா­ரங்­க­ளுக்கும் அவ­ச­ர­மான முடிவு காண­வேண்­டி­ய­வர்­க­ளாக தமிழ்மக்கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பதுதான்  உண்­மை. 

  சுதந்­திரக்­கட்­சி­ ­வேட்­பா­ள­ராக நிறு­தப்­பட்­டி­ருப்­ப­வ­ருக்கு ஆத­ரவு நல்கும் நிலையில் தமிழ் மக்­களோ அல்­லது தமிழர் தரப்­பி­னரோ உள்­ள­னரா என்­பது கடி­னமான கேள்­வி­தான். பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­ட­டி­ருப்­பவர் தொடர்பில் தமிழ்மக்கள் எத்­த­கைய அபிப்­பி­ராயம் கொண்டிருக்கி­றார்கள் என்­பது சொல்­லா­மலே விளங்­கக்­ கூ­டிய விடயம். முள்­ளிப்­போரில் பச்சை பச்­சை­யாக கொல்­லப்­பட்ட அப்­பாவி பொது­மக்கள், வெள்ளைக்­கொ­டி­யுடன் சர­ண­டைந்த போரா­ளிகள், காணாமல் ஆக்­கப்­பட்டோர், கடத்­தப்­பட்டோர் வெள்ளைவான் கடத்­தல்கள்,கோத்தா முகாமின் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் படு­கொ­லை கள் என ஏகப்­பட்ட குற்­றப்­பத்­தி­ரங்­க­ளுக்கு சொந்­தக்­கா­ர­ராக இருப்­பவர் கோத்தா. அத்­த­கைய ஒரு­வரை நாட்டின் தலைவராக்கும் மகாத்­மாக்­க­ளாக தமிழ்மக்கள் இருக்­கப் ­போ­வ­தில்லை என்­பது யாவரும் அறிந்தது.   

தமிழ்மக்­களின் ஆத­ர­வின்றி நாட்டின் தலை­வ­ராக முடி­யு­மென்று மம­தை­யுடன் பேசிய தரப்­பினர் இப்­பொ­ழுது தமிழ்மக்­களின் ஆத ­ரவு தமக்கு இருக்­கி­றது என்று கூறு­ம­ள­வுக்கு நிலை­மைகள் மாறி­யி­ருக்­கின்­றன. அண்­மையில் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான புளொட் அமைப்பின் தலைவர் சித்­தார்த்தன்  மரி­யா­தையின் நிமித்தம் கோத்­தாவின்  அழைப்பை ஏற்று சந்­தித்து உரை­யா­டிய வேளை, பல விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாகத் தெரி­விக்கப்பட்டது. ”என்னை தமிழ்மக்கள்  ஆத­ரிப் ­பார்­க­ளே­யானால் 13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்படுத்­துவேன். பொலிஸ் அதி­கா­ரங்­களை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அளவில் வழங்­குவேன், காணி அதி­கா­ரங்கள் மத்­திய அரசின் செல்­வாக்­குக்கு உட்­பட்­டவை.  அவற்றைத்­த­விர்த்து அனைத்தும் செய்வேன் என கூறி­ய­தாக சித்தார்த்தன் தெரி­வித்­தி­ருந்தார்.

இச்­சந்­திப்பு விவ­காரம் பல சர்ச்­சைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தது.  

இதே­வேளை மஹிந்த ராஜ­பக்ஷவை அண்­மையில் சந்­தித்த சில தமிழ்த்­த­ரப்­பினர், கோத்­தபாய ­ரா­ஜ­பக்ஷ மாத்­தி­ர­மல்ல தங்­களால் நிறுத்­தப்­படும் எந்த வேட்­பா­ள­ரா­யினும் நாங்கள் ஆத­ர­வளிக்கத் தயா­ரா­க­ இ­ருக்­கி­றோ­மென வாக்­கு­றுதி நல்­கி­வந்­தி­ருப்­ப­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

 பொது­வா­கவே ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் கூட்­ட­மைப்பு, இந்­திய அரசின் ஆலோ­ச­னையைப் பெற்­ற­பின்பே முடி­வெ­டுப்­ப­தாக ஒரு ஐதீ­க­முண்டு. கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன். இந்­த­வாரம் இந்­தியா பய­ணித்­தி­ருப்­பது மருத்­துவ தேவைக்­காக என்று கூறப்­பட்­ட­போதும் சில ஊட­கங்கள் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்தின் ஆலோ­ச­னை­யைப்­பெ­று­வ­தற்கே சென்­றுள்ளார் என்ற கருத்­துப்­பட செய்­தி­கள் வெளியாகியுள்­ளன. இது இவ்­வாறு இருக்­க,கோத்­த­பாய ராஜ­பக்ஷ இந்­தியப்­பி­ர­தமர் நரேந்­திர மோடியை சந்­திப்­ப­தற்­கான கோரிக்­கை­யொன்றை அண்­மையில் விடுத்­தி­ருந்­த­போதும் சாத­க­மான பதில் கிடைக்கவில்­லை­யென்றும்  தெரி­விக்கப்படுகிறது.

  இந்­தி­யாவின் நிலை­மை­களை அனு­ச­ரித்தே கூட்­ட­மைப்பு முடி­வு­களை எடுத்­து­ வந்­துள்­ளது என்ற வாய்ப்­பாட்­டுக்கு அமை­ய ­பார்ப்பின், இந்­திய அர­சாங்­கத்தின் கைகாட்டல் இல்­லாமல் கூட்­ட­மைப்பு, பொது­ஜ­ன­ பெ­ர­மு­னவின் வேட்­பா­ள­ரான கோத்­த­பா­ய­ ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு  ஆத­ரவு தரும் நிலைக்கு வரு­ம் என்று கூற முடி­யாது. அது­வுமன்றி  கடந்தகால அனு­ப­வங்­களின் அடிப்­ப­டையில் பார்க்­கும்­போது சர்வ தேசத்­துக்கும் இந்­தி­யா­வுக்கும் வாக்­கு­றுதி­களை வழங்­கிய மஹிந்த ராஜ­பக்ஷ நிறை­வேற்­றாத காரி­யங்­களை கோத்­த­பாய ராஜ­பக்ஷ நிறை­வேற்­றுவார் என்று கூட்­ட­மைப்பு நம்­பு­வ­தற்கு தயா­ராக இருக்­காது என்­பதும் ஒரு பொது­வான ஊகமே.  

 இதே தரு­ணத்தில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ  எதிர்நோக்கும் இன்னும் சில பிரச்சி­னை­க­ளுக்கு முடிவு காணப்­ப­ட­வில்­லை­யென்ற விமர்­ச­னங்­களும் முன் வைக்­கப்­ப­டு­கி­ன்றன. அவ­ரு­டைய அமெ­ரிக்க குடி­யு­ரிமை தொடர்­பான சர்ச்சை இன்னும் தெளிவாக்­கப்­ப­ட­வில்லை என்­பதும்  மறு­மு­னையில் ’எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு நாங்கள் ஆத­ரவு வழங்­கப்­போ­வத்ல்லை’ என்ற சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரின் அறி­விப்­புக்­களும் சாத­க­மாக இல்லாத நிலையே காணப்­ப­டு­கி­றது. இதற்கு அப்பால் முஸ்லிம் கட்­சி­களின் தலை­மைகள்  என்ன முடிவை மேற்­கொள்­வார்கள் என்­ப­தற்கு ஆரூடம் கூற முடி­யாமல் உள்­ளது.

  அடுத்த தெரிவாக் முன்­நிற்­பவர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­ தாஸ. கட்­சி­யி­லி­ருக்கும் புதிய குழு­வினர் இவரை வர­வேற்­பதில் ஆர்­வ­மாக இருக்­கி­றார்கள். தந்­தை­யைப்போல் செயல்திறனும் ஆளு­மையும் கொண்­ட­வ­ராக இவர் விளங்­குவார் என்­பது அவர்­களின் நம்­பிக்கை. ஆனால் கட்­சியில் மேலா­திக்க சிந்­தனை கொண்ட  வேண்டாத மனப்­பாங்குடன்  காணப்­ப­டு­கி­ற­வர்கள் இவரின் வளர்ச்சையையோ தலைமையையோ ஏற்கத்தயாரில்லாத நிலையே காணப்படுகிறது. இன்னும் முடி வில்லா முடிவாக காணப்படும் நிலையில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாவிடின் கட்சியிலிருந்து சஜித்தும் அவரது ஆதர வாளர்களும் விலகிவிடுவார்கள் என்ற தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர்க்க முடியாதபடி பிரதமர் ரணில் இதற்கொரு பொருத்தமான முடிவை எடுக்காவிடில், கட்சி உடையும் நிலைக்கு தள்ளப்படலாமென்றும் அனுமானிக்கப்படு கிறது.

சஜித்தின் வரவை முஸ்லிம் இளைஞர்களும் மூத்த ஆதரவாளர்களும் வரவேற்கிறார்கள் என்ற ஒரு எண்ணப்பாடு நிலவி வருகிற நிலையில் அவரின் தெரிவு பற்றி அதிக ஆட்சேபனை இருக்காது என்று நம்பப்படுவது இயற்கையே. 

இதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அல்லது தமிழ்மக்கள் என்ன முடிவை எடுக்கவிருக்கிறார்கள் என்ற விடயத்தில் ஆழமான கருத்துக்கள் இன்னும் முன் வைக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி யென்பது தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றிவரும் கட்சி. அந்த வழியில் புதிய தலைமைகளும் அதையேதான் செய்வார்கள் என்ற அவநம்பிக்கையிலிருந்து தமிழ்மக்கள் இன்னும் விடுபடவில்லை. அதுவுமன்றி தமிழ்மக்கள் நீண்டகால சிந்தனையுடனும் கொள்கையுடனும் போராடிவரும் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்கும் ஆளுமை கொண்டவராக அல்லது துணிவுடையவராக சஜித் இருப்பாரா என்பதும் இப்போதைக்கு தீர்மானிக்க முடியாத விடயங்கள். அண் மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் தொல் பொருள் திணைக்களத்தின் அட்ட காசங்களுக்கு அவர் இதுவரை மௌனம் சாதித்து வருவதையே காணமுடிகிறது. இவரின் கீழ் உள்ள பௌத்த சாசன அமைச்சின் கீழேதான் தொல்பொருள் திணைக்களம் இயங்கிவருகிறது. இதுவரை ஒருதமிழர் அல்லது முஸ்லிம் கூட இத்திணைக்களத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை.

  எவ்வாறு இருந்த போதிலும் ஒப்பீட்டு ரீதியில் கோத்தாவா அல்லது சஜித்தா என்று வருகிற போது தமிழ்மக்களாயினும் சரி,  முஸ்லிம் மக்களாயினும் சரி தெரிவு செய்யக்கூடிய சாத்திய நிலைப்பாடு குறித்து இதிலிருந்து தெரிந்து கொள்ளமுடியும் . குறிப்பாக மைத்திரியை ஆதரித்து ஏமாந்து போனது போலவோ அல்லது பிரதமர் ரணில்மீது கொண்ட நம்பிக்கைகள் உடைந்து போனது போலவோ இல்லாத ஒரு தெரிவுக்கும் முடிவுக்கும் தமிழ்த் தரப்பினர் வருவார்கள் என்று எதிர்காலத்தில் நம்ப  இடமுண்டு.

திரு­மலை நவம்