அமெரிக்காவில் நியூயோர்க் நகரம் 3 சந்தேகத்திற்கிடமான பொருட்களால் நேற்று வெள்ளிக்கிழமை காலை இரண்டு மணி நேரம் அச்சத்துடன் காணப்பட்டது.

உலக வர்த்தக மையத்திற்கு அருகிலுள்ள ஃபுல்டன் ஸ்ட்ரீட் சுரங்கப்பாதை நிலையத்தில் ரைஸ் குக்கர் ஒன்று கைவிடப்பட்டதை ஒரு பயணி கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தார். குறித்த சுரங்கபாதையானது  2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் கட்டப்பட்டதாகும்.

அதே நிலையத்தின் மற்றொரு பகுதியில் இரண்டாவது ரைஸ் குக்கர் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால்  அச்சம்  அடைந்து, இரண்டு சுரங்கப்பாதை பாதைகளில் சேவை நிறுத்தப்பட்டு ஃபுல்டன் தெருவுக்கு சேவை செய்யும்  ரயில்கள் பிற பாதைகளில் நிலையத்தை கடந்து சென்றன.

சந்தேகத்திற்கிடமான இரண்டு ரைஸ் குக்கர்களையும் பரிசோதிதத்த பொலிசார் பொருட்கள் பாதிப்பில்லாதவை என அறிவித்தார்கள்.

மூன்றாவது சந்தேகத்திற்குரிய ரைஸ் குக்கர் செல்சியா மாவட்டத்தில் 16 வது தெருவில் வடக்கே குப்பைகளுடன் கண்டறியப்பட்டது.

இது முதல் இரண்டோடு "தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்" என்று பொலிஸார்  கூறியுள்ளார்கள்.

செல்சியாவில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில்  பிரஷர் குக்கரில் வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் காயமடைந்தனர் . அச்சம்பவம் 9/11 முதல் தாக்குதல் ஏற்படாத ஒரு நகரத்தில் பீதியைத் கிளப்பியது.

ஃபுல்டன் ஸ்ட்ரீட் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ரைஸ் குக்கர்களையும் ஒரே மனிதர் அங்கு வைத்தது கண்காணிப்பு கேமராவில்  பதிவாகி இருந்தன. அவற்றை ஒரு நபர் ஒரு வணிக வண்டியில் இருந்து வெளியே எடுத்து வைத்துள்ளார். குறித்த நபரை அதிகாரிகள் இப்போது தேடுகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றது.