ஜனாதிபதி தேர்தலும் அரசியல் மருட்சியும்!

Published By: Digital Desk 3

17 Aug, 2019 | 11:27 AM
image

அடுத்த ஜனா­தி­பதி யார் என்­ப­தை­விட அடுத்த ஜனா­தி­ப­திக்­கான வேட்­பா­ளர்கள் யார் என்­பதில் இப்­போது கூடிய கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக தமிழ் மக்கள் இது விட­யத்தில் அதிக ஆர்­வ­மு­டை­ய­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றார்கள். ஜனா­தி­பதி ஆட்சி முறை­மையில் கடந்த காலங்­களில் அவர்­க­ளுக்கு எற்­பட்­டுள்ள கசப்­பா­னதும், மறக்க முடி­யா­த­து­மான அர­சியல் அனு­ப­வங்­களே இதற்கு முக்­கிய காரணம்.

அர­சியல் கட்­சி­களே ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பாளர் யார் என்­பதை முடிவு செய்­கின்­றன. வழ­மை­யாக முக்­கிய கட்­சி­களின் தலை­வர்­களே வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கு­வார்கள். அதனால் கட்­சி­களின் தலைவர் மீது மக்கள் ஏற்­க­னவே கொண்­டி­ருக்­கின்ற அனு­மா­னங்கள், கருத்­துக்கள், நம்­பிக்­கை­களின் அடிப்­ப­டையில் தமது ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வது அவர்­க­ளுக்கு வச­தி­யாக இருந்து வந்­தது.

ஆனால் 2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் அத்­த­கைய உறு­தி­யா­ன­தொரு நிலை­மையைக் காண முடி­ய­வில்லை. பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ரா­கிய மஹிந்த ராஜ­பக் ஷ இரண்டு தட­வைகள் ஏற்­க­னவே ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­தி­ருந்தார். அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தின்­படி – குறிப்­பாக 19 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு அமை­வாக அவர் இந்தத் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது. 

ஜனா­தி­ப­தி­யாக ஒருவர் இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் பதவி வகிக்க முடி­யாது என்­பதை இந்தத் திருத்தச் சட்டம் வலி­யு­றுத்­து­கின்­றது. ஒருவர் எத்­தனை தட­வைகள் வேண்­டு­மா­னாலும் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிக்க முடியும் என்று 18 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் மூலம் ஒரு நிலை­மையை, ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்­த­போது அவர் உரு­வாக்­கி­யி­ருந்தார்.

மூன்­றா­வது தட­வை­யா­கவும் தான் ஜனா­தி­ப­தி­யாக வர­வேண்டும் என்ற அதி­கார ஆசை கார­ண­மா­கவே அவர் 18 ஆவது திருத்தச் சட்­டத்தைக் கொண்டு வந்­தி­ருந்தார். அது மட்­டு­மல்ல, சுயா­தீன குழுக்­களை நிய­மிப்­ப­திலும் அவற்­றுக்­கான தலை­வர்கள், உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­திலும் ஜனா­தி­ப­திக்கு அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக இருந்த கட்­டுப்­பா­டு­களை நீக்கி, ஜனா­தி­பதி விரும்­பி­ய­வர்­களை நிய­மிக்க முடியும் என்ற நிய­தி­யையும் அந்தத் திருத்தச் சட்­டத்தின் மூலம் அவர் கொண்டு வந்­தி­ருந்தார். 

தேக்க நிலைமை

ஆனால் மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்கம் 19 ஆவது அர­சியல் திருத்தச் சட்­டத்தைக் கொண்டு வந்து தடா­ல­டி­யாக மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி பத­விக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த கட்­டுப்­பா­டற்ற சுதந்­தி­ரத்­திற்கு ஆப்பு வைத்து­விட்­டார்கள். இதனால் மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யிட முடி­யாத நிலைமை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரா­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தகுதி பெற்­றி­ருந்­தா­லும்­கூட, ஜனா­தி­பதித் தேர்­தலில் அவ­ருக்­கான வெற்­றி­வாய்ப்­புக்கள் மங்­க­லான நிலை­யி­லேயே அர­சியல் களத்தில் காணப்­ப­டு­கின்­றது. இது வெட்­ட­வெ­ளி­யான ஒரு நிலைமை. 

அதே­வேளை, அந்தக் கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரா­கிய சஜித் பிரே­ம­தாஸ ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான ஆர்­வத்தைக் கொண்­டுள்­ள­மையும், அதற்கு அந்தக் கட்­சிக்குள் காணப்­ப­டு­கின்ற ஆத­ர­வும்­கூட ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வேட்­பா­ளராக வரு­வதில் முட்­டுக்­கட்­டை­யாகக் காணப்­ப­டு­கின்­றது.

அதே­வேளை, ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் ஏற்­பட்­டுள்ள தாம­தமும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வதில் தாக்­கத்தை செலுத்­தி­யுள்­ளது. இதன் கார­ண­மாக வேட்­பாளர் தெரிவு தேக்­க­ம­டைந்­துள்­ளது. 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த காலங்­களில் வெற்றி பெற­வில்லை. இதனால் அவர் அந்தத் தேர்­தலில் வெற்­றியே பெற­மாட்­டாரோ என்ற ஓர் அர­சியல் ரீதி­யான ஐயப்­பாடும்  நில­வு­கின்­றது. இந்த ஐயப்­பாட்டை இல­குவில் புறந்­தள்­ளி­விட முடி­யாது. இருப்­பினும் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் எப்­ப­டி­யா­வது போட்­டி­யிட்டே ஆக வேண்டும் என்ற பிடி­வா­தத்தில் அவர் காணப்­ப­டு­கின்றார். 

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸவின் புதல்வர் என்ற குடும்ப அர­சியல் செல்­வாக்கை பெற்­றுள்ள சஜித் பிரே­ம­தா­ஸவும் எப்­ப­டி­யா­வது இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக உள்ளார். அவ­ரு­டைய ஆத­ர­வாளர்­களும் அதற்கு உர­மேற்றி வரு­கின்­றார்கள். இதனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பாளர் தெரிவு கட்சித் தலை­வரா அல்­லது வேறு ஒரு­வரா என்ற வலு­வான அர­சியல் ரீதி­யான கேள்­விக்கு உறு­தி­யான பதிலைப் பெற முடி­யாத நிலையில் மக்கள் காணப்­ப­டு­கின்­றார்கள்.

ஒரே தொகுதி நேரடி தெரிவு

ஜனா­தி­பதித் தேர்தல் என்­பது நாடு முழு­வதும் ஒரே தேர்தல் தொகுதி என்ற அடிப்­ப­டையில் வாக்­கா­ளர்­க­ளாகத் தகுதி பெற்ற நாட்டு மக்கள் அனை­வரும் வாக்­க­ளிக்கும் வகையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. 

இதனால் நாட்டு மக்கள் அனை­வரும் - பெரும்­பான்மை, சிறு­பான்மை என்ற பேத­மின்­றியும், இனக் குழு­மங்கள் என்ற ரீதி­யி­லான பேத­மின்­றியும் மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­கின்ற நிலைமை காணப்­ப­டு­கின்­றது. 

நாட்டு மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தெரிவு செய்­கின்ற ஜனா­தி­பதி மக்கள் அனை­வ­ருக்கும் பொது­வா­னவர். இதனால், அனை­வ­ருக்கும் அவரே ஜனா­தி­பதி என்ற அர­சியல் நிலைப்­பாடு நிலவு­கின்­றது. இந்தப் பொது­வான நிலைப்­பாடு தேர்தல் நடந்து முடிந்த பின்­னரும் தொடர்ந்து பேணப்­ப­டு­வ­தில்லை. 

ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­பவர் நிச்­ச­ய­மாக பௌத்த மதத்தைச் சேர்ந்­த­வ­ரா­கவே இருப்பார். பௌத்த மதத்தைச் சேராத ஒருவர் இது­வ­ரை­யிலும் இலங்­கையின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை. 

நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறைமை 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் மூலம் உரு­வாக்­கப்­பட்­டதில் இருந்து பௌத்­தர்­களே இது­வ­ரையில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டு பதவி வகித்­துள்­ளனர். 

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­ மு­றை­மையின் பிதா­ம­க­ரா­கிய ஜே.ஆர்.ஜய­வர்­தன, ரண­சிங்க பிரே­ம­தாஸ, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜ­பக் ஷ, மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோர் நாட்டின் ஜனா­தி­பதி பத­வியை அலங்­க­ரி­த்துள்­ளனர். 

நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் பொது­வா­ன­வ­ராகத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி பொறுப்பை ஏற்­றி­ருந்­த­வர்கள், எல்­லோ­ருக்கும் பொது­வா­ன­வர்­க­ளாக நடந்து கொண்­டார்­களா என்ற கேள்வி முக்­கி­ய­மா­னது. இறு­தி­யாக ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்­கின்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் பொது­வா­ன­வ­ராக செயற்­பட்­டுள்­ளாரா என்ற கேள்­வியும் உள்­ளது. 

முத­லா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி

ஐக்­கிய இலங்­கைக்குள் பெரும்­பான்மை இன மக்­க­ளா­கிய சிங்­கள மக்­க­ளுடன் சம உரி­மை­க­ளுடன் இணைந்து வாழ முடி­யாது என்ற நிலைப்­பாட்­டிற்கு 1976 ஆம் ஆண்டு தமிழ் அர­சியல் தலை­வர்கள் வலிந்து தள்­ளப்­பட்­டி­ருந்­தார்கள். 

சிங்­கள மக்­க­ளுடன் சம உரிமை உடை­ய­வர்­ளாக, அர­சியல் அதி­கார பலத்­துடன் தமது தாயகப் பிர­தே­சங்­களில் - தமி­ழர்கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்த வடக்கு கிழக்கு பகு­தி­களில் வாழ வேண்டும் என்ற கோரிக்கை சிங்­கள பேரின அர­சி­யல்­வா­தி­க­ளினால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

தமிழ் மக்­களின் இந்த நியா­ய­மான அர­சியல் கோரிக்கை தொடர்ச்­சி­யாக சிங்­கள அர­சியல் தலை­வர்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்டு வந்­த­தனால், இது இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னை­யாக வடி­வெ­டுத்­தது. இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் வழியில் தீர்வு காண வேண்டும் என்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள், அணு­கு­மு­றைகள் என்­ப­வற்றின் கீழ் எட்­டப்­பட்ட உடன்­பா­டுகள், செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்கள், உடன்­ப­டிக்­கைகள் கிழித்­தெ­றி­யப்­பட்­டன. அல்­லது கிடப்பில் போடப்­பட்டு உதா­சீ­னப்­ப­டுத்­தப்­பட்­டன. 

இதனால் 1976 ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்­டையில் ஒன்று கூடிய தமிழ் அர­சியல் தலை­வர்கள் தனி­நாட்டுக் கோரிக்­கையை நிறை­வேற்­றி­னார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் 1977 ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­தலை, தனி­நாட்டு கோரிக்­கைக்­கான சர்­வ­சன வாக்­கெ­டுப்­பா­கவே கருதி தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். 

இந்தத் தேர்­தலில் அமோ­க­மாக தமிழர் விடு­தலைக் கூட்­டணி வெற்­றி­பெற்­றி­ருந்­தது. தொடர்ந்து தனி நாட்­டுக்­கான கோரிக்­கையை முன்வைத்து ஆயுதப் போராட்­டமும் தமிழ் இளை­ஞர்கள் மத்­தியில் கருக்­கட்­டி­யி­ருந்­தது. அக்­கா­லப்­ப­கு­தியில் தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு எதி­ராக கல்­வியில் கொண்டு வரப்­பட்ட தரப்­ப­டுத்தல் நடை­முறை இந்தத் தனி­நாட்டுப் போராட்­டத்­திற்கு உர­மான அடித்­த­ளத்தை இட்­டி­ருந்­தது. 

இத்­த­கை­யதோர் அர­சியல் சூழ­லில்தான் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறைமை நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு, அப்­போது பிர­த­ம­ராக இருந்த ஜே.ஆர்.ஜய­வர்­தன முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்றுக் கொண்டார். 

திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை

இந்த ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்­திற்கு முன்னர் ஆட்சி அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்த ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வி­யா­கிய அப்­போ­தைய பிர­தமர் திரு­மதி சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க தீவிர சிங்­களத் தேசியக் கொள்­கையைக் கடைப்­பி­டித்­த­துடன், உள்ளூர் உற்­பத்திப் பொரு­ளா­தா­ரத்தில் கடும் பற்று கொண்­ட­வ­ராகத் திகழ்ந்தார். 

சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கா­விடம் இருந்து 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய ஐக்­கிய தேசியக் கட்சி திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கையைக் கடைப்­பி­டித்­தது. அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­ன­வி­னு­டைய தலை­மையின் கீழ் நில­விய இந்தப் பொரு­ளா­தாரக் கொள்கை அர­சியல் ரீதி­யாக விரக்தி அடைந்­தி­ருந்த தமிழ் இளை­ஞர்கள், தமிழ்க் குடும்­பங்கள் பல­வற்­றுக்கு ஒரு வரப்­பி­ர­சா­த­மாக அமைந்­தது. 

கல்­வியில் தரப்­ப­டுத்தல், வேலை­யில்லாத் திண்­டாட்டம், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு கோரி நடத்­தப்­பட்டு வந்த போராட்­டங்கள் போன்ற கார­ணங்­க­ளினால் தமிழ் மக்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் தமது எதிர்­காலம் குறித்து பெரிதும் கலக்­க­ம­டைந்­தி­ருந்­தார்கள். இந்த நிலையில் அரசு மேற்­கொண்­டி­ருந்த திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை பல­ரையும் வெளி­நா­டு­களை நோக்கிப் படை­யெ­டுப்­ப­தற்குத் தூண்­டி­யி­ருந்­தது. அதே­வேளை நாட்டின் அர­சியல் நிலை­மை­க­ளினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த பலர் பாது­காப்புத் தேடி வெளி­நா­டு­க­ளுக்குப் புலம்பெயர நேர்ந்­தது என்­பதும் முக்­கி­ய­மா­னது.

அவ்­வாறு வெளி­நா­டு­க­ளுக்குச் சென்­ற­வர்கள் தமது அந்த நாடு­களில் குறிப்­பாக ஐரோப்­பிய நாடு­களில் தமது வாழ்க்­கையை நிரந்­த­ர­மாக்கிக் கொள்ள முடிந்­தது. பின்­நாட்­களில் தாய­கத்தில் யுத்­தத்தின் பிடியில் சிக்­கி­யி­ருந்த தமிழ் மக்­க­ளுக்கு இவர்­க­ளு­டைய பொரு­ளா­தார நிலை­மைகள் பெரிதும் கைகொ­டுத்­தி­ருந்­தன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

இது ஒரு வகையில் தமிழ் சமூ­கத்­திற்கு நன்­மை­ய­ளித்­தி­ருந்­தது என்றே கூற வேண்டும். யுத்த மோதல்கள் தீவி­ர­ம­டைந்து, நிலை­மைகள் தாய­கத்தில் மிகவும் மோச­ம­டைந்­தி­ருந்­த­போது, பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்க்­கைக்கு ஆதா­ர­மான பொரு­ளா­தார உத­வி­க­ளையும், அதே­போன்று ஆயுதப் போராட்­டத்­திற்­கான ஆத­ர­வையும் இவ்­வாறு புலம்­பெ­யர்ந்­தி­ருந்­த­வர்கள் பெரு­ம­ளவில் வழங்­கி­யி­ருந்­தார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான புலம்­பெ­யர்ந்­த­வர்­களின் உத­விகள் இப்­போதும் தொடர்­கின்­றது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

கொடூ­ரங்கள்

திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை தமிழ் மக்­க­ளுக்கு ஒரு வகையில் நன்­மை­ய­ளித்த போதிலும், அர­சியல் ரீதி­யாக ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் ஆட்சி கொடுங்­கோ­லாட்­சி­யா­கவே திகழ்ந்­தது என்­பதை மறுக்க முடி­யாது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் ரீதி­யாகத் தீர்வு காண்­ப­தற்கு சிங்­களத் தலை­வர்கள் உடன்­பட்­டி­ருக்­க­வில்லை. மாறாக தமிழ் மக்­களின் சாத்­வீகப் போராட்­டத்தை அடக்கி ஒடுக்­கு­வ­தி­லேயே கவனம் செலுத்­தி­யி­ருந்­தனர். இதனால் விரக்­தி­ய­டைந்த தமிழ் இளை­ஞர்கள் ஆயுதப் போராட்­டத்தில் முனைப்பு காட்­டி­யதைத் தொடர்ந்து மாவட்ட சபை முறை­மையை, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வாக ஜே.ஆர். அர­சாங்கம் முன்­வைத்­தது.

பிராந்­திய சுயாட்­சியைக் கோரி­யி­ருந்த போதிலும், கிடைப்­பதைப் பெற்று அதில் இருந்து முன்­னோக்கி நக­ரலாம் என்ற அடிப்­ப­டையில் மாவட்ட சபை முறை­மையை ஏற்று அதற்­கான தேர்­தலில் தமிழர் விடு­த­லைக்­ கூட்­டணி போட்­டி­யிட்­டி­ருந்­தது.

அந்தத் தேர்­தலில் யாழ்ப்­பா­ணத்­துக்­கான மாவட்ட அபி­வி­ருத்தி சபையின் நிர்­வா­கத்தைக் கைப்­பற்­று­வ­தற்கு முறை­யற்ற வகையில் முயற்சி செய்த அர­சாங்கம் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விட்­டது. இந்த வன்­மு­றை­க­ளின்­போ­துதான் யாழ் நூல­கத்தை எரித்து, சிங்­களக் காடை­யர்கள் யாழ்ப்­பா­ணத்தில் வெறி­யாட்டம் போட்­டார்கள். 

தமி­ழர்­களின் கலா­சாரப் பெருமை வாய்ந்த நூல­கமும், தமி­ழர்­களின் கலா­சாரத் தலை­ந­க­ர­மு­மா­கிய யாழ்ப்­பா­ணமும் இந்த வன்­முறை வெறி­யாட்­டத்­தின்­போது எரிந்து சாம்­ப­ராகின. தமி­ழர்­களின் தாயக நகரில் அவர்­க­ளு­டைய வர்த்­தக நிலை­யங்கள் எரிக்­கப்­பட்டு பொரு­ளா­தா­ரமும் பொசுக்கி அழிக்­கப்­பட்­டது, உயி­ரி­ழப்­புக்­களும் நேர்ந்­தன. 

தொடர்ந்து ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜ­ய­வர்­த­னவின் ஆட்­சி­யில்தான் வர­லாற்றுக் கறை­படிந்த கறுப்பு ஜுலை தமி­ழர்கள் மீதான இன அழிப்பு நட­வ­டிக்­கை­யாக அரங்­கேற்­றப்­பட்­டது. ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்கள் வெட்­டியும் கொத்­தியும் தீயில் போட்டு எரித்தும் கொல்­லப்­பட்­டார்கள்.

இந்த கொடூ­ரங்­களை நிகழ்த்­திய பின்னர், ஏதி­லி­க­ளாக அகதி முகாம்­களில் அச்­சத்­தோடு அபயம் தேடி­யி­ருந்த தமி­ழர்­களை நோக்கி, போர் என்றால் போர் சமா­தானம் என்றால் சமா­தானம் என்று ஜனா­தி­பதி ஜய­வர்­தன கர்ச்­சனை செய்­தி­ருந்தார்.

சந்­தி­ரி­காவும் சாதிக்­க­வில்லை

ஜே.ஆருக்குப் பின்னர் ஜனா­தி­ப­தி­யாக பின்னர் பத­வி­யேற்ற ரண­சிங்க பிரே­ம­தாஸ, அப்­போது நாட்டில் நிலை­கொண்­டி­ருந்த இந்­திய அமை­திப்­ப­டை­யி­னரை வெளி­யேற்­று­வ­தற்­காக ஒரு வகையில் விடு­த­லைப்­பு­லி­களைப் பயன்­ப­டுத்திக் கொண்டார். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக தற்­கொலை குண்டுத் தாக்­குதல் ஒன்­றிற்கு மேதின நாளில் அவர் பலி­யா­கிப்­போனார். அவ­ரு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் அர­சியல் ரீதி­யாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு சந்­தர்ப்பம் இல்­லாமல் போனது என்றே கூற வேண்டும்.

பிரே­ம­தா­ஸ­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சிக்­காலம் அஸ்­த­மித்துப் போனது. அத­னை­ய­டுத்து ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்பில் தமிழ் மக்­க­ளுக்கு விடி­வெள்­ளி­யாகத் தோற்­ற­ம­ளித்த சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­யானார். 

அவர் மீது தமிழ் மக்கள் அள­வற்ற நம்­பிக்கை கொண்­டி­ருந்­தார்கள். அந்த நம்­பிக்­கையின் அடை­யா­ள­மாக மக்கள் மத்­தியில் அதிகம் பாவ­னையில் இருந்த பொருட்­களைக் கொண்டு செல்­கின்ற பை – வய­ரினால் ஆன பேக், சந்­தி­ரிகா பேக் என பிர­பல்யம் பெற்­றி­ருந்­தது. 

அது மட்­டு­மல்ல. புடவைக் கடை­களில் பெண்­களைக் கவர்ந்த வண்ண டிசைன்­க­ளி­லான சாரி­களும் சந்­தி­ரிகா சாரி என்ற பெய­ரோடு பிர­பல்யம் பெற்­றி­ருந்­தது. ஆனாலும், விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான யுத்த மோதல்­களைத் தணிப்­ப­தற்­காக இடம்­பெற்ற பேச்­சுக்­க­ளின்­போது, பூந­கரி ஊடான சங்­குப்­பிட்டி – கேர­தீவு ஊடான யாழ் குடா­நாட்­டுக்­கான தரை­வழி மார்க்­கத்தில் அமைந்­தி­ருந்த இரா­ணுவ முகாம் ஒன்றை சில மீற்றர் தொலை­வுக்குப் பின்­னோக்கி நகர்த்தி பொது­மக்­களின் போக்­கு­வ­ரத்தை இல­கு­ப­டுத்­து­மாறு விடுத்த விடு­த­லைப்­பு­லி­களின் கோரிக்கை அவரால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

அதன் விளை­வாக மோதல்கள் தீவி­ர­ம­டைந்­தன. பூந­கரி பாதையும் மூடப்­பட்­டது. மாற்­று­வ­ழி­யாக குடாக்­க­ட­லே­ரியைப் பட­குகள் மூலம் பூந­கரி பிர­தே­சத்தில் உள்ள நல்லூர் - கிளாலி வழி­யாக நடை­பெற்ற பொது­மக்கள் போக்­கு­வ­ரத்து மார்க்­கத்தில் பட­குகள் மீது மிக மோச­மான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு பொது­மக்கள் பெரு­ம­ளவில் கொல்லப்பட்டார்கள். 

சந்திரிகாவின் காலத்தில் யுத்தம் முடிவுக்கு வரவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வும் கிடைக்கவில்லை. அவர் மீதான தாக்குதல்கள் இடம்பெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருந்தன. அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் அவரும் தமிழ் மக்களுக்கான ஜனாதிபதியாக நடந்து கொள்ளவில்லை. 

மருட்சியுடனான காத்திருப்பு 

அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகளைப் போலவே அவரும் சிங்கள மக்களின் ஜனாதிபதியாகவே நடந்து கொண்டார். தமிழ் மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் அவருடைய ஆட்சி நடைமுறைகள் இடம்பெற்றிருக்கவில்லை. 

அந்த கொடூர ஆட்சியின் அழிக்க முடியாத பதிவாக முள்ளிவாய்க்கால் பேரழிவு இடம்பெற்றதும், தமிழர் பிரதேசங்களில் யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நிர்வாக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. யுத்தம் முடிவுற்ற சூழலில் மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடித்து, சிறுபான்மை இன மக்களின் அமோகமான ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் தமிழ் மக்களின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதே தவிர, அவர்களுடைய வாழ்க்கையில் விடிவு ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை.  

இத்தகைய பின்னணியில்தான் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் அரசியல் வெளியின் மூலையில் காத்து நிற்கின்றது. அந்தத் தேர்தலில் யார் யார் எந்தக் கட்சிகளின் சார்பில் களமிறங்கப் போகின்றார்கள் என்பதை அறிவதற்கு மக்கள் ஆவல் கொண்டிருக்கின்றார்கள். 

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் வெளிவருவதை உண்மையான ஆர்வத்துடன் பார்த்திருக்கின்றார்கள் என்பதைவிட அவர்கள் ஒருவகையில் அரசியல் மருட்சியுடன்தான் பார்த்திருக்கின்றார்கள். காத்திருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும். 

பி.மாணிக்­க­வா­சகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41