வடக்கு மாசிடோனியாவில் சிகை அலங்கார கலைஞர் ஒருவர், வெட்டப்பட்ட முடிகளைக் கொண்டு அழகிய சித்திரங்களை தீட்டி அசத்தி வருகிறார்.

கிரிவோகஸ்தானி என்ற இடத்தில் சிகை அலங்காரக் கடை வைத்துள்ள ஸ்வெல்டானா என்ற பெண், வாடிக்கையாளர் தலையில் இருந்து வெட்டப்பட்ட முடிகளை கொண்டு அழகிய சித்திரங்களை தரையில் தீட்டுகிறார்.

டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், உலகின் பிரபல நடிகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் உருவத்தை முடிகளில் அழகாக காட்சிப்படுத்துகிறார்.

இவரது கைவண்ணத்தை பார்க்கவே வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. சலூன் தொழில் ஒரு புறம் இருந்தாலும், அழகிய சித்திரங்கள் வரைவதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.