(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்காது. இறுதியில் நிச்சயம் பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்து ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்தும். ஆளும் தரப்பினருக்கு எதிராக செயற்படுவதற்கு சுதந்திர கட்சிக்கு எதிரணியினருடன் ஒன்றிணைவதை தவிர்த்து பிறிதொரு உபாயம் ஏதும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டே எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டுள்ளார் என்று ஆளும் தரப்பின் முக்கிய உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள கூடியது. இன்று தேசிய பாதுகாப்பே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா உட்பட அனைத்து தரப்பினருக்கும் அமைக்கவுள்ள அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.அரசியல் பழிவாங்கள்களுக்கும், தனிப்பட்ட பிணக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையினை முன்னெடுக்க முடியாது. புதிய மாற்றத்தை ஏற்படுத்தவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ களமிறக்கப்படுகின்றார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.மறுபுறம் சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் சுதந்திர கட்சி தனித்து ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதாகவும் அக்கட்சியின் ஒரு தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தனித்து ஒருபோதும் களமிறக்காது. நிச்சயம் பொதுஜன பெரமுனவுடன் இறுதி தருணத்தில் கைகோர்த்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படும். ஆளும் தரப்பினருக்கு எதிராக செயற்படுவதற்கு சுதந்திர கட்சிக்கு எதிரணியுடன் ஒன்றிணைவதை தவிர பிறிதொரு உபாயம் ஏதும் கிடையாது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதை தொடரந்து கட்சி மூன்றாக பிளவுப்படும். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் இறப்பிற்கு பிறகு ஜனாதிபதி பதவி ஐக்கிய தேசிய கட்சிக்கு உரித்துடையாக்கப்படவில்லை. குறுக்கு வழியிலே ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. பொதுவேட்பாளரை ஒருவரை களமிறக்கு அவரின் உதவியுடன் ஆட்சியை அடைவது முரணான செயற்பாடாகும். இம்முறையும் பொதுவேட்பாளரை களமிறக்கவே பிரதமர் அரசியல் சூழ்ச்சியினை மேற்கொள்கின்றார் .
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM