இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டுவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிதாக தலைமை பயிற்சியாளரை தெரிவு  செய்வதற்காக இந்திய கிரிக்கெட் சபை விண்ணப்பங்களை கோரியிருந்த்து.

இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன . ஏற்றுக்கொள்ளப்பட்ட  விண்ணப்பங்களை கபில்தேவ் தலைமையிலான தெரிவுக்குழுவினர் ஆய்வு செய்தது. பின்னர் ரவி சாஸ்திரி, மைக் ஹெஸ்சன், டொம் மூடி உள்பட 6 பேரின் இறுதிப் பட்டியலை தயாரித்தது. அவர்களிடம் நேற்றையதினம் நேர்காணல் இடம்பெற்றது.  

இறுதியில் ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்துள்ளோம் என்று கபில்தேவ் தெரிவித்தார். ரவி சாஸ்திரி 2021 வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.