சூரியவெவ பெதிகம்தொட  கங்காராம விகாரையில் இருந்த ஐந்து உலோகத்தால் ஆன புத்தர் சிலை ஒன்று இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.

 சூரியவெவ பதிகம்த்தோட்ட கங்காராம விகாரையின் தலைமை தேரர் பனாகொட சுமனவங்ஷ   சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியச்சாலையில் சிகிச்சைப்பெற்று விகாரைக்கு மீண்டும் வந்து பார்த்தப்போதே விகாரையில் இருந்த ஐந்து உலோகத்தால் ஆன புத்தர்ச்சிலை காணவில்லையென அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.