(எம்.மனோசித்ரா)

நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித்துள்ளேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

திஸ்ஸமகாராமவிற்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்திருந்தப்போது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். 

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்னை வேட்பாளராக அறிவித்த போது நாட்டின் எதிர்காலம் பற்றியும் நடைமறைக்கு சாத்தியமான  கொள்கைகளையும் குறிப்பிட்டிருந்தேன். அவை அனைத்தும் பிரயோசனமான வேலைத்திட்டங்களாகும். என்னை வரவேற்பதற்கு இங்கு வருகை தந்த உங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கோதாபய மேலும் குறிப்பிட்டார்.