சிங்கப்பூருக்கான பொறியியல் பயிற்சி மற்றும் ஆய்வு நிலையம் இலங்கையில்

Published By: Priyatharshan

12 May, 2016 | 10:51 AM
image

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தால் தான் இலங்கையில் மாணவ, மாணவிகள் பொறியில் பாடத்தைப் படிக்க பயிற்சி நிலையங்களுக்குச் சென்றது ஒரு காலம். அந்த நிலைமை இப்போது மாறி கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் கூட சித்தியடையாவிட்டாலும் மாணவர்களாகிய நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. காரணம் சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கையிலுள்ள முன்னணி பொறியியல் கல்விப் பயிற்சி நிறுவனமான ஜயலத் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் பொறியியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையமொன்றை அமைத்துள்ளது.

இந்த பொறியியல் பயிற்சி நிலையத்தில் கல்வி கற்பதற்கு பரீட்சைப் பெறுபேறுகள் ஒரு முக்கியமான காரணியாக கருதப்பட மாட்டாது.

இங்கு கல்வி கற்பதற்கு உங்களுக்குத் தேவையான அடிப்படையே,ஆர்வம்,விருப்பம், முன்நேர வேண்டும் என்ற ஆசை ஆகிய காரணிகளே ஆகும். மாணவ, மாணவிகளாகிய உங்கள் வாழ்க்கையின் இலட்சியக் கனவை நனவாக்க ஜயலத் பொறியியல் கல்விப் பயிற்சி நிறுவனம் சிங்கப்பூர் அரசுடன் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் அரசும் ஜயலத் பொறியியல் கல்வி பயிற்சி நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளும் பொறியியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தின் பொறியியல் பாடத்திற்காக புதிய தொகுதி தற்போது இணைத்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

மே மாதம் அதாவது இந்த மாதத்திற்கான புதிய தொகையை இணைத்துக் கொள்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியில் இருந்து விண்ணப்பங்களை கோரி வருகிறது. இதற்கு மாணவர்களாகிய நீங்கள் மே மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்து கொள்ள வேண்டுமாயின், தொடர்புகளுக்கு இல. No.658,dr.Danister De Silva Mawatha, Colombo Jayalath Construction Equipment Training Insitiute (Pvt) Ltd என்ற முகவரிக்கோ அல்லது உடனடி தொலைபேசி இலக்கமான 07 700 25 611 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த பொறியியல் தொழிற் பயிற்சி குறித்து கருத்து கருத்து தெரிவித்த ஜயலத் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஹர்ஷன சேனாரத்ன கூறுகையில்,

ஒரு தொகுதியில் 200 மாணவர்களையே பதிவு செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்கு விசேட காரணம் எமது பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி மட்டுமல்ல உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புக்களையும் இத்துறையில் பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் பயிற்சிகள் வழங்கப்படும். இங்கு உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்குவர். எமது பயிற்சி நிறுவனம் அமைதியான சூழல் ஒன்றான கண்டி வீதி பாசியாலயவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களாகிய உங்களின் வசதிக்கு ஏற்ப 03 மாதம், 06 வாரம், 04 வாரம் மற்றும் 02 வார பாடத் திட்டத்தை தெரிவு செய்து கொள்ள முடியும்.

மேற்கூறப்பட்ட விதமாகவே உங்களுக்கு ஆர்வம், விரும்பம், வாழ்க்கையில் உண்மையான வெற்றியை காண வேண்டும் என்ற ஆசை இருந்தால் எம்முடன் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள். அல்லது நீங்கள் நல்ல பெற்றோராக இருந்தால் உங்கள் பிள்ளைக்கு இந்த பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு தேவையான அனுமதியை இன்றே பெற்றுக் கொடுக்க மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பிள்ளையின் இலட்சியக் கனவை நனவாக்குங்கள் எனத்தெரிவித்தார்.

ஜயலத் பொறியியல் கல்விப் பயிற்சி நிறுவனத்தில் இருந்து இதுவரை 35,000 மாணவர்கள் கல்வி கற்று வெளியேறியுள்ளனர். 

இவர்களில் 85 சதவீதமான மாணவர்கள் தற்போது தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் இங்கு கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் டுபாய், மலேசியா போன்ற நாடுகளிலும் தொழில்புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல இயந்திரங்களில் பயிற்சிகளைப் பெற்று Field Master ஆக வேண்டுமா? அதற்காக அதிகமாக ஆங்கிலம் தெரிய வேண்டும் என்றோ அல்லது கல்வித் தகைமை வேண்டுமென்றோ நினைத்து வருத்தப்பட வேண்டாம். அவை ஒன்றும் இல்லாமலேயே பேக்க லோடா, டம்பிரக், மொபைல் கிரைன், வீழ்லோடா,போக்லீப்ட் ஆகியவற்றுக்கான பயிற்சிகள் பொறியியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வழங்கப்படும்.

பாடசாலையில் இருந்து கல்வி கற்று வெளியேறுபவர்களுக்காக பொறியியல் கல்விப் பயிற்சி நெறிகளான Auto Mobile Technicians, with Hybrid Techonology, Auto Electrical Technicians, Ref & AC Technicians with Invester System, Hydraulic Machanic, Construction Site Supervisors போன்ற பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மாணவர்களாகிய உங்களுக்கு சிறந்த பயிற்சி சர்வதேச சான்றிதழ்கள், தொழில் வாய்ப்புக்களைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு இதோ ஒரு பெரிய கதவு உங்கள் முன்னால் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை இன்றே பெற்றுக்கொள்ளுங்கள். சற்றும் தாமதிக்க வேண்டாம்.

ஜயலத் பொறியியல் கல்வி பயிற்சி நிறுவனம் 1961ஆம் ஆண்டு பொறியியல் கல்வி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு இலங்கையில் முன்னணி கல்விப் பயிற்சி நிறுவனமாக திகழ்கின்றது. இந்த பயிற்சி நிறுவனத்தில் இருந்து வருடத்திற்கு 2500 மாணவர்கள் கல்விக் கற்று வெளியேறுகின்றனர். 

அத்துடன் உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புக்களை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து பயிற்சிகள் (Training) பரிசீலனைகள் (Testing) தேர்வுகளை (Placement) ஆகியவற்றை மேற்கொள்கின்றது. இந்த பயிற்சி நிலையத்தில் கல்வியை தொடர்ந்தால் உங்கள் வாழ்வு வெற்றி பெறுவது உறுதி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57