உலகின் மூலைமுடுக்கெங்கும் இடம்பெறும் சம்பவங்களை செய்திவாயிலாக நீங்கள் உடனுக்குடன் தமிழில் உங்கள் கைகளில் உள்ள கைத்தொலைபேசியூடாக அறிந்துகொள்ள வீரகேசரி தனது வாசகர்களுக்கு புதிய முறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

உலக இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி தனது 90 ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில் தனது அபிமான வாசகர்களுக்கு தமிழில் குறுந்தகவல் செய்திச் சேவையினை வாசகர்களுக்கு  அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் தமிழர்களின் வரலாறாகவும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழ் பேசும் மக்களின் குரலாகவும் வீரகேசரி இருந்து வருகின்றது.

இலங்கையில் வாழும் தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷங்களையும் தமிழர்களின் வரலாற்று சான்றுகளையும் தன்னகத்தே வைத்துள்ள ஒரேயொரு தமிழ் ஊடக ஆவண பொக்கிஷமாக வீரகேசரி இருக்கின்றது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1930 களில் ஸ்தாபிக்கப்பட்டவீரகேசரியின் குறுந்தகவல் செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற்றுக்கொள்ள டயலொக் வலையமைப்பில் REG VK என டைப் செய்து 87960 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் நீங்கள் வீரகேசரியின் குறுந்தகவல் செய்திச் சேவையுடன் இணைந்துகொள்ள முடியும்.

குறுந்தகவல் செய்திச் சேவையினை நீங்களும் செயற்படுத்திட -    

Type REG VK Send to 87960